Rowdy vs Police | ‘’ திருந்தி வாழ்றது தப்பா! மீண்டும் CHAIN அறுக்கவா?’’ போலீஸை மிரட்டிய நபர்

Continues below advertisement

நான் திருந்தி வாழ்றது தப்பா..மீண்டும் செயினை அறுக்கவா உங்களை அலையவிடவா என நபர் ஒருவர் போலீசாரிடம் கையை அறுத்துக்கொண்டு மிரட்டல் விடுத்ததோடு கதறி அழுது புலம்பியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 நெல்லை கொக்கிரகுளத்தை சேர்ந்தவர் அருண்குமார்.  மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது புதிய வழக்கு தொடர்பாக இவருக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், அதனை எடுத்துக்கொண்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ரகளையில் ஈடுபட்டார்.என்னோட பெயரை ஏன் இந்த வழக்கில் சேர்த்தீங்க என போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர், ’’பசிக்காக திருட தொடங்கியவன் அதையே தொழிலாக்கி விட்டேன். இப்போ திருந்தி வாழ்கிறேன். ஆனாலும் என் மீது பொய் வழக்கு போடுகிறார்கள்.  மீண்டும் பெண்கள் கழுத்தில் செயினை அறுத்து உங்களை அலைய விடவா என கதறி அழுதபடி கூறினார். மேலும் நீங்க தான் என் வாழ்க்கை சீரழிந்து போனதற்கு காரனம் என காவல் அதிகாரிகளிடம் ஆவேசமாக பேசினார்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதைத்தொடர்ந்து அவரது கையில் ஏற்பட்ட காயத்திற்கு முதலுதவி சிகிச்சை அளித்து பாளையங்கோட்டை போலீசார் அவரை விசாரணைக்கு அழைத்து சென்றனர்..

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram