CCTV Footage S.I. வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு.. கார் பைக் நாசம்

Continues below advertisement

குமரி மாவட்டம் புத்தன் சந்தை பகுதியை சேர்ந்த செலின்குமார் களியக்காவிளை காவல்நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார். இன்று அதிகாலை இவரது வீட்டினுள் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் மற்றும் இருசக்கர வாகனம் திடிரென தீப்பற்றி எரிந்தது. இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செலின்குமார் மற்றும் குடும்பத்தினர் குழித்துறை தீ அணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். இதில் இருசக்கர வாகனம் முழுவதுமாக எரிந்த நிலையில், காரும் கிட்டத்தட்ட எரிந்து நாசமானது. இதனையடுத்து செலின்குமார் தனது வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் இரண்டு வாலிபர்கள் செலின்குமார் வீட்டில் வாகனங்கள் நிறுத்தி வைத்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமாராவை திசைத்திருப்பிவிட்டு, சுமார் 2.40 மணியளவில் வாகனங்களின் மீது பெட்ரோல் குண்டை வீசி தீவைத்தது தெரியவந்தது. கடந்த 28 ஆம் தேதி இவர் வளர்த்து வந்த நாயை, மர்மநபர்கள் சிலர் விஷம் கொடுத்து கொன்ற நிலையில் இந்தச்சம்பவம் அரங்கேறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து அருமனை காவல்த்துறையினர் Cc TV காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram