Nellai Illegal adoption : பெற்ற குழந்தையை விற்பனை செய்த தாய் - நெல்லையில் அதிர்ச்சி சம்பவம் |

Continues below advertisement

பெற்ற குழந்தையை காசுக்காக தாயே வித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், பணத்தை பங்கிட்டு கொள்வதில் ஏற்பட்ட தகராறால் இந்த சம்பவம் வெளிச்சதிற்கு வந்துள்ளது.. நெல்லை மாவட்டம் முக்கூடல் அருகே வசித்து வந்தவர் தேவி. இவர் அதே பகுதியை சேர்ந்த வியாகம்மாள் மேரி, மார்க்ரெட் தீபா ஆகியோருடன் சேர்ந்து 6 மாதத்திற்கு முன்பு தனது 2 வயது மகள் தர்ஷனாவை அதே பகுதியை சேர்ந்த ஜான் எட்வர்ட் - அற்புதம் தம்பதியினருக்கு 30 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். இந்த நிலையில் தேவிக்கு மீண்டும் இரண்டாவது முறையாக பெண்குழந்தை பிறந்துள்ளது. அதனால் மீண்டும் விற்பனைக்கு தயாரான தேவி, தான் கருவுற்றிருந்த போதே மார்க்ரெட் தீபா மூலம் தென்காசியை சேர்ந்த அமலா பாத்திமா, ஞானமிக்கேல் தம்பதியருக்கு பேரம் பேசியுள்ளார். இதனால் பிரசவச் செலவையும் அந்த தம்பதியரே ஏற்றுள்ளனர் . பெண் குழந்தை பிறந்த வெறும் 25 நாட்களிலேயே அந்த பிஞ்சு குழந்தையை 1 லட்சத்து, 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். ஆனால் இந்த பணத்தை பிரித்து கொள்வதில் குழந்தையின் தாய் தேவிக்கும், இடைத்தரகர்கள் வியாகம்மாள் மேரி , மார்க்ரெட்தீபா ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தங்களுக்குள் அடித்து கொண்ட இவர்கள், குழ்ந்தை விற்பனையை வெளியே போட்டு உடைக்க மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் விசாரணை மேற்கொண்டு சம்பவம் உண்மை என்பதை உறுதி செய்து மாவட்ட குழந்தைகள் நலக்குழுவினருக்கு பரிந்துரை செய்தனர், இதனால் தற்போது விற்பனை செய்யப்பட்ட இரண்டு குழந்தைகளை பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். குழந்தையை மீட்ட கையோடு, இந்த விவகாரம் காவல்துறையை எட்ட, முக்கூடல் போலீசார் வழக்கு பதிவு செய்து குழந்தையின் தாய் தேவி , குழந்தை விற்பனை புரோக்கர்கள் இரண்டுபேர் , குழந்தைகளை சட்டவிரோதமாக விலைக்கு வாங்கிய பெற்றோர்கள் 4 பேர் என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். இதனால் பயந்துபோன 7 பேரும் தற்போது தலைமறைவாகிவிட்டனர். இவர்களை பிடிக்க மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மணிவண்ணன் உத்தரவுப்படி தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டை நடைப்பெற்று வருகிறது. குழந்தைகள் விற்கப்பட்ட சம்பவம் நெல்லை மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram