Bear in Tree | ஊருக்குள் புகுந்த கரடி..மரத்தில் ஏறியதால் பரபரப்பு!விரட்டும் பணிகள் தீவிரம்

Continues below advertisement

ஊருக்குள் புகுந்த கரடி..மரத்தில் ஏறியதால் பரபரப்பு!விரட்டும் பணிகள் தீவிரம்

நெல்லை மணிமுத்தாறு பகுதி பட்டப் பகலில் ஊருக்குள் புகுந்த கரடியை பொதுமக்கள் விரட்டி அடித்த நிலையில், கரடி அருகில் இருந்த மரத்தில் ஏறியதால் பரபரப்பு ஏற்பட்டது. 

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் புலி, சிறுத்தை, கரடி,யானை, மான், மிளா காட்டெருமை உள்ளிட்ட பல்வேறு விலங்குகள் உள்ளன 
வன விலங்குகள் உணவை தேடி அவ்வப்போது ஊருக்குள் வருகிறது இந்நிலையில் இன்று ஞாயிறு விடுமுறை நாள் என்பதால் அங்குள்ள அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது.

இன்று பிற்பகலில் பட்டப்பகலில் மணிமுத்தாறின் பிரதான சாலைகளில் ஒரு கரடி பட்டப்பகலில் சாலையை கடந்து சென்றது. இதனை பார்த்த அப்பகுதியைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர்.

 

பின்னர் அந்த கரடி அருகில் இருந்த மரத்தின் மீது  ஏறியது. இதனால் அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் பீதி அடைந்தனர். தொடர்ந்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வனத்துறையினர் விரைந்து மயக்க ஊசி செலுத்தி கரடியை பிடிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.ஊருக்குள் புகுந்த கரடி..மரத்தில் ஏறியதால் பரபரப்பு!விரட்டும் பணிகள் தீவிரம்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram