Nellaiappar Temple Song : நெல்லையப்பருக்கு பிரத்யேக பாடல்!உற்சாகத்தில் பக்தர்கள்

Continues below advertisement

பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் கோவிலுக்கு திருவிழா காலங்களில் பயன்படுத்துவதற்கு என பிரத்தியேக பாடல் வெளியிடப்பட்டுள்ளது.ஆனி தேர் பவனி என பெயரிடப்பட்டு பாடப்பட்ட பாடலின் இசைத்தட்டினை வேளாக்குறிச்சி ஆதீனம் வெளியிட்டார்..

தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லை நெல்லையப்பர் திருக்கோவில் ஆனித் திருவிழா நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு சிவாலயங்களுக்கும் பிரத்தியேக பாடல்கள் பிரபல பாடகர்களால் பாடப்பட்டு வெளியிடப்பட்டு அந்த பாடல்கள் பிரபலமடைந்து வருகிறது. இந்த நிலையில் நெல்லை நெல்லையப்பர் திருக்கோவிலுக்கும் பிரத்தியேகமாக பாடல் ஒன்றினை உருவாக்க வேண்டும் என கோவில் நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து நெல்லை சங்கர் நகர் பகுதியில் அமைந்துள்ள ஜெயேந்திர பள்ளி பள்ளி மாணவர்கள் மற்றும் பள்ளி இசை ஆசிரியர் ஆகியோர் உதவியுடன் ஆனி தேர் பவனி என்ற பாடல் உருவாக்கப்பட்டது.

 

இதனை ஆனித் திருவிழா ஐந்தாம் திருநாளில் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள நின்ற சீர் நெடுமாறன் கலையரங்கத்தில் வேளாக்குறிச்சி குருமகா சன்னிதானம் வெளியிட்டார். நெல்லையப்பர் திரு கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் அதனை பெற்றுக் கொண்டனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram