Tiruchendur Elephant : ’’சோறு சாப்டியா?’’நலம் விசாரித்த டாக்டர்CUTE-ஆக தலையாட்டிய யானை

திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானையிடம் கால்நடை மருத்துவர் ’’சோறு சாப்டியா? தண்ணீ குடிச்சியா?’’ என கேட்க அதற்கு தெய்வானை யானை குழந்தை போல் தலையை ஆட்டி பதில் சொல்லும் காட்சிகள் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 18-ம் தேதி திருச்செந்தூர் முருகன் கோவில் யானை தெய்வானை தாக்கியதில் முன்னாள் ராணுவ வீரர் சிசுபாலன்(59), யானையின் உதவி பாகன் உதயகுமார் (45). ஆகியோர் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உதவிபாகன் உதயகுமார் உயிரிழந்ததால் யானை தெய்வானை சோகத்துடன் சரிவர உணவு அருந்தாமல் இருந்து வந்தது. இதையடுத்து இரண்டு கால்நடை மருத்துவர்கள் 24 மணி நேரமும் யானையை கண்காணித்து வருகின்றனர். இன்று யானையை உதவி பாகன் செந்தில் வழக்கம் போல் தெய்வானையை குளிப்பாட்டி அலங்கரித்தார். இதனையடுத்து யானைக்கு வழக்கமாக கொடுக்கப்படக் கூடிய உணவும் கொடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து
நெல்லை வனக் கால்நடை மருத்துவர் மனோகரன் யானை தெய்வானையிடம் ’’ சோறு சாப்பிட்டியா தண்ணீ குடிச்சியா?’’என கேட்கிறார்.அதற்கு குழந்தை போல் க்யூட்டாக தலையசித்து பதில் அளித்தது தெய்வானை.

இந்த காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola