Accident News : ட்ரை சைக்கிள் மீது சொகுசு கார் மோதி கோர விபத்து பதற வைக்கும் காட்சி

Continues below advertisement

ட்ரை சைக்கிள் மீது சொகுசு கார் மோதி கோர விபத்து பதற வைக்கும் காட்சி

விளாத்திகுளம் அருகே சாலை விபத்தில் 7 வயது சிறுவன் உட்பட 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழப்பு.

ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடம் பகுதியை சேர்ந்த   தங்கம்மா (35),  மாரியம்மாள்(66), சதீஷ் (07), சிலம்பரசன் ஆகிய நான்கு பேரும் 3 சக்கர ட்ரை சைக்கிள் மூலமாக பழைய பேப்பர் பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து விற்பனை செய்யும் தொழில் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ள  சூரங்குடி சண்முகபுரம் உள்ளிட்ட பகுதிகளில்  பழைய பேப்பர்,  பழைய பிளாஸ்டிக் பொருட்களை எடுத்து கொண்டு ட்ரை சைக்கிள் மூலமாக தங்கச்சிமடம் செல்லும்பொழுது, கீழ சண்முகபுரம் கிராமத்திலிருந்து  கிழக்கு கடற்கரை சாலையை கடக்கும் முயன்ற போது கன்னியாகுமரியில் இருந்து வேளாங்கண்ணி சென்ற சொகுசு கார் மோதி விபத்துக்குள்ளானதில், ட்ரை சைக்கிளில் இருந்த  தங்கம்மா, மாரியம்மா, 7 வயது சிறுவன் சதீஷ்  உள்ளிட்ட மூன்று பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். சிலம்பரசன் படுகாயம் அடைந்தார். அதேபோல் சொகுசு காரில் பயணித்த கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியை சேர்ந்த செல்வராஜ், ஓட்டுநர் ஜெனித் (29), குமரித்தங்கம் ஆகிய நான்கு பேருக்கும் காயம் ஏற்பட்டது.

காயம் ஏற்பட்ட நான்கு பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்,உயிரிழந்த சிறுவன் உட்பட 3 பேரின் உடலையும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு  பிரேத ஆய்வுக்காக அனுப்பி வைத்து சூரங்குடி காவல் நிலைய போலீசார் வழக்கு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram