கதவை பூட்டிய மாமியார் வாசலில் கதறி அழுத மருமகள் ”வரதட்சணை கொடுமை தாங்கல” | Thiruvarur Dowry Case

Continues below advertisement

திருமணமாகி ஒன்றரை வருடம் ஆன நிலையில் வரதட்ச்னை கேட்டு தராததால் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய கணவன் வீட்டின் முன்பு நின்று கதறியபடி போராட்டம் நடத்திய மனைவி..நகைக்காக விவாகரத்து செய்யாதீர்கள்  நீங்களும் ஒரு பெண் தானே தயவுசெய்து என் கணவரோடு பேச விடுங்கள் என மாமியாரிடம் மருமகள் மன்றாடிய சம்பவம் காண்போரை கண்கலங்க செய்தது.

திருவாரூர் நகரத்திற்கு உட்பட்ட புகையிலை தோட்டம் கனிமுத்து நகர் பகுதியை சேர்ந்தவர்கள் சந்திரன் அம்சவள்ளி தம்பதியினர்.சந்திரன் திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில்  பணிபுரிந்து வருகிறார்.அம்சவல்லி நன்னிலம் ஆதிதிராவிடர் நலத்துறையில் பணிபுரிந்து வருகிறார்.இவர்களது மூத்த மகன் மணிகண்டன் திருவாரூரில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.இவருக்கும் நாகை மாவட்டம் ஆழியூர் பகுதியைச் சேர்ந்த தீபா என்பவருக்கும் கடந்த ஒன்றை வருடத்திற்கு முன்பு இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் மணிகண்டன் குடும்பத்தினர் வரதட்சணை கேட்டு தீபாவை தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததால் பிரச்சனை ஏற்பட்டு கடந்த ஆறு மாதமாக தீபா மணிகண்டனை பிரிந்து தனது தாய் வீட்டில் வசித்து வருகிறார்.முன்னதாக திருமணமாகி ஆறு மாதத்தில் வரதட்சணை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனையில் மாமனார் சந்திரன் தீபா வயிற்றில் எட்டி உதைத்ததில் கரு கலைப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.இந்த நிலையில் மணிகண்டன் தீபாவை விவாகரத்து செய்வதற்கான நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில் தீபா தனது கணவர் வீட்டிற்கு உறவினர்களுடன் வருகை தந்து அவரது வீட்டு வாசலில் முன்பு கதறி அழுது தனக்கு நியாயம் வேண்டும் எனக் கேட்டார்.

மேலும் நகைககாக என்னை விவகாரத்து செய்யாதீர்கள் எனது கணவரோடு என்னை பேச விடுங்கள் அவருடன் நான் சேர்ந்து வாழ வேண்டும் நீங்களும் ஒரு பெண் தானே அத்தை என் கணவருடன் என்னை சேர்த்து வையுங்கள் அவரைப் பற்றி எனக்கு தெரியும் அவர் என்னுடன் சேர்ந்து வாழவே விருப்பப்படுகிறார் என்று கதறி அழுதபடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். தன்னை கணவருடன் பேச விடவில்லை என்றால் விஷம் குடித்து இறக்கப் போவதாகவும் அவர் தெரிவித்து இந்த போராட்டத்தில் ஈடுபட்டார்.

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola