Thiruvannamalai landslide | மண்ணில் புதைந்த 7 பேர்! திருவண்ணாமலையில் நிலச்சரிவு! தற்போதைய நிலை என்ன?
திருவண்ணாமலையில் ஏற்பட்ட நிலச்சரிவில் 7 பேர் மண்ணுக்குள் புதைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மீட்புப் பணிகள் தொடர்ந்து வரும் நிலையில் 7 பேரின் நிலை என்ன ஆனது என்பது கேள்வியாக மாறியுள்ளது.
ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, தர்மபுரி, கள்ளக்குறிச்சி கனமழை பெய்தது. இதனால் மக்கள் பாதுகாப்பாக வீடுகளுக்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டது. இந்தநிலையில் திருவண்ணாமலையில் மழைப் பொழிவின் காரணமாக அண்ணாமலையார் மலை மீது மண் சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த மண் சரிவினால் மலை மீது இருந்த பாறை அடிவாரத்தில் உள்ள இரண்டு வீடுகளுக்கு மேல் விழுந்துள்ளது. அப்போது வீடுகளுக்குள் இருந்த ஏழு பேர் மண் சரிவில் சிக்கியிருக்கலாம் என அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறையினர். மாநில மீட்புப் படை, தேசிய மீட்புப் படை என 100க்கும் மேற்பட்டோர் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன், திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் உள்ளிட்ட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
நேற்று இந்த சம்பவம் நடந்த நிலையில் 7 பேரின் நிலை என்ன ஆனது என்பது பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. முதற்கட்டமாக மண்சரிசால் மரங்களும் சரிந்து வந்துள்ளதால் அதனை அப்புறப்படுத்தும் வேலைகளில் இறங்கியுள்ளனர்.