மாமுல் தராத ஆட்டோக்காரர் ! ஓட ஓட விரட்டிய கும்பல்.. பகீர் கிளப்பும் வீடியோ
திருவள்ளூர் அருகே சொந்த இடத்தை விற்றதற்கு கமிஷன் தராததால் ஓட ஓட அவரின் வீட்டின் அருகே வெட்டப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதன் வீடியோ காட்சி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் உள்ள பள்ளம் பகுதியில் வசிப்பவர் பாண்டியன் லதா தேவி தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். கடந்த 10 வருடங்களுக்கு முன்பு இந்த பகுதியில் இவர்கள் வீடு கட்டி வசிக்க வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே பாண்டியன் இதே பகுதியில் இவர் வாங்கி வைத்திருந்த ஒரு இடத்தை விற்பனை செய்துள்ளார். விற்பனை செய்த இடத்திற்கு கமிஷன் தர வேண்டும் என்று கூறி யுவராஜ் பாண்டியனிடம் பல நாட்களாக தகராறு செய்துள்ளார்.
இந்த பிரச்சனைக்காக பாண்டியன் வீட்டில் இருக்கும் பொருட்களை உடைப்பது வீட்டில் உள்ள புறாக்களை துன்புறுத்துவது. சிசிடிவி கேமராவை உடைத்து நொறுக்குவது என பல வழிகளில் பயத்தை பாண்டியனுக்கு யுவராஜ் காட்டியதாக கூறப்படுகிறது. ஆனால் இவைகளுக்கு பாண்டியன் பயப்படாத காரணத்தால் அவரை தீர்த்து கட்டுவது என்று யுவராஜ் முடிவெடுத்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சம்பவம் நடந்த நேற்று காலை ஏழரை மணியளவில் சுமார் எட்டு பேர் கொண்ட கும்பல் பாண்டியன் வீட்டில் அருகே வந்து சுற்றி திரிந்துள்ளனர். இதைப் பார்த்து சந்தேகம் வந்த பாண்டியனின் தம்பி ராமமூர்த்தி இவர்களை செல்போனில் படம் பிடித்துள்ளார் அப்பொழுது ஒருவர் ஆலை நெருங்கி விட்டோம் போட்டு விடலாமா என்று கூறியதை ராமமூர்த்தி கேட்டுள்ளார்.
உடனே தனது அண்ணன் பாண்டியன் இடத்தில் இதை கூறுவதற்காக ஓடி வரும் பொழுது நின்று கொண்டிருந்த அந்த கொலைகாரர்கள் கத்தியோடு பாண்டியனை சரமாரியாக 12 இடத்தில் வெட்டி உள்ளனர். இதில் பாண்டியன் ரத்த வெள்ளத்தில் அந்தப் பகுதியில் உள்ள சாலையில் சரிந்துள்ளார் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்த காரணத்தால் கொலைகாரர்கள் ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. உடனே ரத்த வெள்ளத்தில் துடித்துக் கொண்டிருந்த பாண்டியனை அவரின் தம்பி தூக்கி போலீசாருக்கு தகவல் அளித்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும் இதுகுறித்து மீஞ்சூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தற்பொழுது மூன்று பேரை கைது செய்ததாக கூறப்படுகிறது. மீதம் உள்ளவர்களை போலீசார் தேடிக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கமிஷன் தொகை தராத காரணத்திற்காக ஒருவரை கொலை செய்ய எட்டு பேர் கொண்ட கும்பல் வந்தது அந்த பகுதியில் பயத்தை ஏற்படுத்தி உள்ளது.