Theni Jallikattu : நாங்க வேற மாதிரி.. கெத்து காட்டும் தேனி இளசுகள் | Theni | Jallikattu Vadam | Jallikattu |

Continues below advertisement

கடந்த இரண்டு வருசமா கொரோனா பரவல். பள்ளிக்கூடமும் இல்ல. காலேஜ் இல்ல. என்ன பன்றதுனே தெரியல கிரிக்கெட் விளையாட க்ரவுண்ட்க்கு போனா போலீஸ் தொல்ல வேற. கிரேன் கேமராவ பறக்க வச்சு வெரட்ட ஆரம்பிச்சுருவாங்க. வீட்லயே கெடந்து எப்ப பாரு செல்போன பாத்துட்டு கேம் விளையாட்றது, பேஸ்புக் பாக்குறது யூ டியூப்ல வீடியோ பாக்குறதுனு பொழுதப்போக்குற சிட்டி பசங்கள பாத்துருப்போம். ஆனா என்ன நடந்தாலும் சரி 25 நிமிசத்துல அத அடக்குவேண்டானு போட்டி போட்டு விளையாட்ற விளையாட்டு என்னனு தெரியுமா பப்சி கேமோ இல்ல ப்ரீ பையர் கேமோ கிடையாதுங்க. முன்ன காலத்துல விளையாட்ட கூட வீரமா பாத்தாங்க.

அப்டி ஒரு விளையாட்டுதா இது. தேனி மாவட்டம் கோட்டூர் அப்டிங்கிர ஒரு கிராமத்துல ஊருக்கு ஒதுக்குப்புறமா இருக்குற ஒரு தண்ணி வத்திப்போன குளத்துல காலியான க்ரவுண்டுல சின்னபசங்கள்ளருந்து பெரிய பசங்க வரைக்கும் ஒரு கூட்டம் இருக்கு. என்ன கூட்டம் அப்டினு கிட்ட போய் பாத்தா உடம்பே கூசும்ங்க 2 ஆள் மட்டத்துக்கு இருக்க ஒரு ஜல்லிக்கட்டு காளையோட விளையாட்ர பசங்க. என்னடா பன்றீங்கனு கேட்டா அது விளையாட்டாமாம்னு சொன்னாங்க. இந்த தேனி பசங்க இருக்காங்களே...

‛பொழுது போகல... ஜல்லிக்கட்டு காளைகளோட விளையாடுறோம்’இந்த விளையாட்டு நம்ம தமிழ் பாரம்பரிய வீர விளையாட்டுல ஒன்னு வடம் அப்டிங்குர ஒரு விளையாட்டாம். ஒரு குறுகிய வட்டத்துக்குள்ள 8 பசங்க நின்னும் ஒரு கையிறால கட்டிப்போட்டு சில மீட்டர் தூரத்துல துள்ளிக்குதிக்கும் ஜல்லிக்கட்டு காளைய அடக்கனும். இதுக்கு 25 நிமிசம் டைம் இதுல அடக்குறவங்களுக்கு பரிசோ இல்ல பதக்கமோ கிடையாது. இதுல ஜெய்ச்சா ஒரு சந்தோசமாம். உயிருக்கு ஆபத்தான இந்த ஜல்லிக்காடு காளையோட விளையாட்ர விளையாட்டு இந்த பசங்களுக்கு ஒரு பொழுது போக்காம். நல்ல விளையான்டீங்கப்பா அப்டினுதா கேக்க தோனும். இப்ப இருக்க காலகட்டத்துல சின்ன பசங்களும் சரி பெரிய பசங்களும் சரி ஓடி ஆடி விளையாடுறதுங்குறது கிடையாது ஆனா இந்த பசங்க விளையாட்டுல ஒரு வீரமும் இருக்கு அதுல நம்ம பாரம்பரியமும் காக்கப்படுதுனு சொல்லலாம். இன்று உள்ள கால சூழலில் தமிழர்களின் பாரம்பரியங்களும் கலாச்சாரங்களும் வீர விளையாட்டுகளும் அழிந்து வரும் நிலையில் ஆங்காங்கெ இது போன்ற விளையாட்டுக்கள் நடைபெறுவது மீண்டும் நமது கலாச்சாரங்கள் உயிர்பெற்று வருகிறது என்றே சொல்லலாம்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram