Thanjavur Boy German Girl Marriage | தமிழ் பையன் ஜெர்மன் பொண்ணு தஞ்சாவூரில் டும்..டும்..COUPLE GOALS
தஞ்சாவூர் இளைஞர் ஒருவர் தனது ஜெர்மன் நாட்டு காதலியை தமிழ்முறைப்படி தஞ்சாவூரில் திருமணம் செய்து கொண்ட சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெர்மன் நாட்டு மணப்பெண் விலினா பட்டுப்புடவை அணிந்து வந்து காண்போரை வியக்க வைத்துள்ளார்.
தஞ்சாவூர் மாவட்டம் பூதலூர் அருகே கூனம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விக்னேஸ்வரன். தஞ்சையிலிருந்து ஜெர்மனி நாட்டில் உள்ள ஐ.டி., கம்பெனிக்கு வேலைக்கு சென்றார் விக்னேஸ்வரன். அதே நிறுவனத்தில் ஜெர்மன் நாட்டை சேர்ந்தவர் விலினா பெர்கன் என்பவரும் பணியாற்றியுள்ளார். இருவரும் அந்த கம்பெனியில் 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில், ஒருவர் ஒருவர் மேல் ஒருவர் காதல் வயப்பட்டுள்ளனர்.
இதனையடுத்து இருவரது பெற்றோரிடம் தங்களின் விருப்பத்தை கூறி உள்ளனர். மதம் இனம் நாடு என பேதைமைகளை பொறுப்படுத்தாமல் இருவரின் பெற்றோரும் பச்சைக் கொடி காட்ட இவர்களின் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து இன்று காலை விக்னேஷ்வரனுக்கும், விலினாபெர்கனுக்கும் வெளிநாட்டு, உள்நாட்டு நண்பர்கள்,உறவினர்கள் வாழ்த்துக்களுடன் தஞ்சாவூரில் தமிழ் முறைப்படி பிரமாண்டமாக திருமணம் நடந்தது.. மணமகள் விலினாபெர்கன் பட்டுசேலை அணிந்து வந்து அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தினார்.
இந்த காதல் ஜோடிக்கு தமிழ் முறைப்படி வெகுவிமரிசையாக திருமணம் நடைபெற்றது.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது





















