Tanjavur Theft Video : சட்டையை கழட்டி சண்டை..தலை தெறிக்க ஓடிய திருடன்..விபரீத CCTV வீடியோ
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநடுந்து சென்ற நபரிடம் செல்போனை பிடுங்கி பணம் பறிக்க வந்த திருடனிடம் அந்த நபர் சண்டையிட, தான் அணிந்து இருந்த டீசர்ட்டை கழட்டிவிட்டு துண்ட காணோம், துணிய காணோம் என திருடன் ஓட்டம் பிடித்தார். தற்போது திருடன் தப்பி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
தஞ்சை கீழவாசல் பகுதியைச் சேர்ந்த அன்வர் பேக் என்பவர், கீழவாசல் டாஸ்மாக் கடை அருகில் உள்ள படிமா சந்தில் தனியாக வந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் அவரிடம் செல்போன் மற்றும் 5000 பணத்தை வழிப்பறி செய்துள்ளனர். இந்த அதிர்ச்சியூட்டும் சிசிடிவி காட்சி தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தஞ்சையில் பட்டப்பகலில் நடந்து சென்ற இளைஞரிடம் செல்போன் வழிபறியில் ஈடுபட்ட இருவரை போலீசார் தேடி வருகின்றனர். இளைஞரிடம் இருந்த செல்போனை பறித்த ஒருவர் அவரிடமிருந்த பணத்தை கேட்டு மிரட்டி உள்ளனர். செல்போனை பிடுங்கியவரிடம் பணம் பறிக்க முயன்ற போது இளைஞர்களிடம் ‘எதற்காக செல்போனை பறித்தாய்’என அந்த நபர் சண்டையிட்டார். இதனால் செய்வது அறியாத தவித்த திருடன் தான் அணிந்து இருந்த டீசர்ட்டை கழட்டிவிட்டு துண்ட காணோம், துணிய காணோம் என ஓட்டம் பிடித்தார். தற்போது திருடன் தனது டி-ஷர்டை கழற்றி வீசிவிட்டு தப்பி ஓடிய காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.