Woman Murder: சிறுநீர் கழித்த பெண் வியாபாரி! வெட்டிக் கொன்ற ரவுடி! சென்னையில் பகீர்!
சென்னை திருவொற்றியூரில், காய்கறி கடை நடத்தி வந்த பெண் கொடூரமாக வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தடுக்க முயன்ற அவரது கணவருக்கும் தலையில் சரமாரி வெட்டு விழுந்துள்ளது. வெட்டிவிட்டு தப்பியோடிய நபரை பொதுமக்கள் மடக்கி பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். முதற்கட்ட விசாரணாயில் அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை திருவொற்றியூர் சன்னதி தெருவை சேர்ந்தவர் மாரி. இவரது மனைவி கௌரி. இவர்கள் இருவரும் அதே பகுதியில் சாலையில் காய்கறிகள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் னேற்று இவர்களது கடைக்கு வந்த நபர் ஒருவர், தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து கணவன், மனைவி இருவரையும் சரமாரியாக வெட்டியுள்ளார்.
இதில் படுகாயம் அடைந்த கௌரி, சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பலியானார். மேலும் மாரிக்கு தலை மற்றும் கையில் கத்தியால் வெட்டியதில் காயம் ஏற்பட்டது. இருவரையும் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்ற கொலையாளியை அக்கம்பக்கத்தினர், சுற்றி வளைத்துப் பிடித்து, திருவொற்றியூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், கொலையாளியை கைது செய்தனர். பலியான கௌரியின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மாரியை சிகிச்சைக்காக அருகில் இருந்த மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து போலீசார் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில் கௌரியையும், மாரியையும் வெட்டிய நபர் அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பது தெரியவந்துள்ளது. கொல்லப்பட்ட கௌரிக்கும், கொலையாளிக்கும் 10 நாட்களுக்கு முன்பு ஒரு தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்ததும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சேகர் வழக்கமாக தூங்கும் இடத்தில், கௌரி கடந்த 10 நாட்களுக்கு முன்பு சிறுநீர் கழித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சேகர், கௌரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அதற்கு கௌரி அவரை தனது செருப்பை கழற்றி அடித்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், னேற்று கௌரியின் கடைக்கு வந்த சேகர், கௌரி மற்றும் மாரியிடம் வாக்குவாதம் செய்துள்ளார். தகராறு முற்றிய நிலையில், ஆத்திரத்தில் சேகர் கௌரியை சரமாரியாக வெட்டியுள்ளார். மேலும் தடுக்க வந்த அவரது கணவரையும் தலை மற்றும் கையில் வெட்டியுள்ளார். தொடர்ந்து, இந்தக் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சேகரை கைது செய்த போலீசார், கொலைக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பொதுமக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பகுதியில் கொலை நடந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.