RN Ravi: பதவியேற்ற ஆளுநர்! பக்கத்தில் ஸ்டாலின்!

Continues below advertisement

RN Ravi: நாகலாந்து மாநிலத்தின் ஆளுநராக பொறுப்பு வகித்த வந்த ஆர்.என்.ரவி, (RN Ravi) தமிழ்நாட்டின் ஆளுநராக நியமிக்கப்பட்டதை( TamilNadu Governor) அடுத்து அவரது பதவியேற்பு விழா இன்று நடைபெற்றது. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இன்று (18-ந் தேதி ) சென்னை உயர்நீதிமன்ற (Madras High Court) தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி (Cheif Justice Sanjib Banerjee) புதிய ஆளுநராக ஆர்.என்.ரவிக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். இதையடுத்து, தமிழ்நாட்டின் 26வது ஆளுநராக ஆர்.என்.ரவி பதவியேற்றுக் கொண்டார்( TN Governor RN Ravi) . பதவியேற்பு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்(CM MK Stalin). மூத்த அமைச்சர் துரைமுருகன்(Durai murugan) ஆகியோர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி( ADMK Edappadi palanisamy) தனது கட்சியின் மூத்த உறுப்பினர்களான கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம், எஸ்.பி.வேலுமணி உள்பட பலர் பங்கேற்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram