பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News

Continues below advertisement

இருசக்கர வாகனத்தில் கார் மோதாமல் இருக்க கார் ஓட்டுனர் பிரேக் அடித்தபோது கட்டுபாட்டை இழந்த கார் சாலை ஓர மரத்தில் மோதி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துள்ளானதில் ஒரே குடும்பத்தைச் மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் காரமடையில்   இருசக்கர வாகனம் சர்வீஸ் சென்டர் நடத்தி வரும் ,வெங்கடேசன் தனது மனைவி இரண்டு குழந்தைகள் தந்தை,தாயார் அக்கா மாமா ஆகிய ஒன்பது பேருடன் விழுப்புரம் அருகே உள்ள மதுரவீரன் கோயிலுக்கு சென்று விட்டு மீண்டும் காரில் திண்டிவனம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.  அப்போது திண்டிவனம் அருகேயுள்ள தென்பசியார் அருகே சென்றபோது  முன்னாள் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை இடிக்காமல் இருப்பதற்காக வெங்கடேசன் காரை திருப்பி உள்ளார்.

அப்பொழுது கட்டுப்பாட்டை இழந்த காரானது திண்டிவனம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மரத்தின் மீது மோதி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வெங்கடேசனின் மனைவி தாய் தந்தை ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் வெங்கடேசனின் இரண்டு பெண் குழந்தைகள் அவரது அக்கா  மற்றும்  மாமா  ஆகியோர் படுங்காயங்களுடன் திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

விபத்தில் முன்னாள் இருசக்கர வாகனத்தில் சென்ற  தென்கலவாய்  கிராமத்தை சேர்ந்த செல்வம்  காயங்களுடன் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து மயிலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்துவருகின்றனர். விபத்து காரணமாக சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அரை மணி நேரத்திற்கு போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola