TTV Dhinakaran ADMK Alliance | ஒரே ஒரு பேனர்... அதிமுக கூட்டணியில் TTV? ஓரங்கட்டப்பட்டாரா OPS?

Continues below advertisement

ஒரு பேனர் மூலம் அதிமுக கூட்டணிக்குள் டிடிவி தினகரன் வருகிறாரா என்ற பரபரப்பான விவாதத்தை கிளப்பி வைத்துள்ளார் பாஜகவின் வினோஜ் பி செல்வம். அதிமுக கூட்டணிக்குள் ஓபிஎஸ்-ஐ கொண்டு வரும் முயற்சியை பாஜக கைவிட்டு விட்டதா என்ற கேள்வி வந்துள்ளது.

நாடாளுமன்ற தேர்தலின் போது ஓபிஎஸ்-ம் டிடிவி தினகரனும், பாஜகவுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்த பிறகு 2 பேரும் ஓரங்கட்டப்பட்டனர். அதன்பிறகு கூட்டணியில் இருந்து ஒதுங்கி கொண்ட 2 பேரும் அதிமுகவுக்கு எதிராக விமர்சனங்களை வைத்து வருகின்றனர். ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரனை மீண்டும் அதிமுகவிற்குள் கொண்டு வர பாஜக எடுத்த முயற்சி தோல்வியிலேயே முடிந்தது. அடுத்ததாக 2 பேரையும் கூட்டணிக்குள் கொண்டு வர பேச்சுவார்த்தை நடந்து வந்த நிலையில் டிடிவி தினகரனுக்கு இபிஎஸ் க்ரீன் சிக்னல் கொடுத்ததாக பேச்சு இருந்தது.

இந்தநிலையில் 2026 சட்டப்பேரவை தேர்தலையொட்டி தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் வரும் ஜனவரி 23-ம் தேதி மதுராந்தகத்தில், நடைபெற உள்ளது. இந்தக் கூட்டத்திற்கான ஏற்பாடுகளை பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன. இந்தக் கூட்டத்திற்காக பாஜக வினோஜ் பன்னீர்செல்வம் சார்பில் வைக்கப்பட்டுள்ள விளம்பரப் பேனர்கள், தமிழக அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்தப் பேனரில் இடம்பெற்றுள்ள தலைவர்களின் படங்கள், வரும் தேர்தலில் கூட்டணி எப்படி அமையும் என்பதற்கான சிக்னலாக பார்க்கப்படுகிறது.

பேனரில் பிரதமர் மோடி, அமித் ஷா, ஜே.பி. நட்டா ஆகியோருடன் தமிழக பாஜக தலைவர்களின் படங்கள் இடம் பெற்றுள்ளன. அதேபோல் பாமகவின் அன்புமணி ராமதாஸ், தமாகாவின் ஜி.கே.வாசன்,  புதிய நீதிக் கட்சியின் ஏ.சி.சண்முகம், இந்திய ஜனநாயகக் கட்சியின் பாரிவேந்தர், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஜான் பாண்டியன் ஆகியோரின் புகைப்படங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த வரிசையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம் டிடிவி தினகரன் அதிமுக கூட்டணியில் இணைகிறாரா என்ற கேள்வி வந்துள்ளது. மேலும் இந்த பேனரில் ஓபிஎஸ் புகைப்படத்தை தவிர்த்திருப்பதன் மூலம் பாஜக முயற்சியை கைவிட்டுவிட்டதா என்ற கேள்வி வருகிறது.

தென் மாவட்டங்களில் தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ள தினகரனுக்கு, இந்தக் கூட்டணி வலுவான அடித்தளமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது தென் மாவட்டத்தில் அதிமுக சந்தித்த சரிவை வரும் தேர்தலில் மீட்டெடுக்க முடியும் என அரசியல் வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola