Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் வேலைநேரத்தில் தனது அலுவலகத்தில் மதுபோதையில் தூங்கிக்கொண்டிருந்த சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துறையூர் வட்டத்திற்குட்பட்ட பாலகிருஷ்ணம்பட்டி கிழக்கு வருவாய் கிராமத்தின் கிராம நிர்வாக அலுவலராக சின்னத்தம்பி என்பவர் பணியற்றிவருகிறார்.
இந்த நிலையில், அப்பகுதியைச் சேர்ந்த சிலர் கிராம நிர்வாக அலுவலரைச் சந்திக்க சென்றபோது, அவர் அலுவலகத்தின் முன் உள்ள வராண்டாவில் மதுபோதையில் சட்டை கூட அணியாமல் வெறும் உடலுடன் தூங்கிக் கொண்டிருந்தார்.
அப்போது அவரை வீடியோ எடுத்த அவர்கள், அரசு அதிகாரி வேலை நேரத்தில் இப்படி சட்டை கூட இல்லாமல் வெளியே தூங்கலாமா, மக்கள் எப்படி இங்கு வருவார்கள் என்று என்று கேள்வியெழுப்பினர்.
அதற்கு அந்த அதிகாரி, "எந்த VAO-வும் ஆஃபிஸ்-கு வரமாட்டாங்க... நான் மட்டும்தான் வரேன்" என்று அலட்சியமாகக் கூறினார்.
இந்த நிலையில் அப்பகுதி மக்கள் தற்போது, அந்த அதிகாரி மீது தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், இச்சம்பவம் தொடர்பான வீடியோவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.