’’கேரளா காருக்கு NO ENTRY அரசு பஸ் போகலாம்’’ அத்துமீறிய TRAFFIC POLICE?
''கவர்ன்மெண்ட் பஸ் no entry-ல போலாம் நீ ஏன் போற'' எனக்கூறி ராமேஸ்வரத்தில் கேரள கார் ஒன்றை போக்குவரத்து காவலர்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்தின் போது காரில் வந்தவரின் சட்டையை காவலர்கள் கிழித்ததாகவும் அந்த வீடியோவில் குற்றம் சாட்டியுள்ளனர்.
கேரளாவை சேர்ந்த டூரிஸ்ட் கார் ஓட்டுநர் ஃபெட்ரிக் என்பவர் ஆஸ்திரேலிய சுற்றுலா பயணிகளை அழைத்துக்கொண்டு ராமேஸ்வரம் சென்றுள்ளார். அப்போது திடீரென அவர்களது காரை போக்குவரத்து காவலர் வழிமறித்துள்ளார். இது நோ எண்ட்ரி எனக்கூறியுள்ளார் அந்த காவலர். அதற்கு ஓட்டுநரோ இந்த சாலையில் பேருந்து முதல் இருசக்கர வாகனங்கள் வரை அனைத்து சென்று கொண்டிருக்கிறது. இதனால் நான் அந்த வழியில் ஓட்டிச் சென்றேன் என கூறியுள்ளார். அப்போது அந்த பகுதியில் இருந்த போக்குவரத்து காவலர்கள் காரை மறித்து ஒன்வே வில் வந்ததாக கூறி தொடர் வாக்குவாததில் ஈடுபட்டனர். பதிலுக்கு காரில் இருந்தவர் பஸ் போது இது எப்படி நோ எண்ட்ரி என வாக்குவாதத்தில் ஈடுபட, அது கவர்மெண்ட் பஸ் என அலட்சியமாக பதிலளித்துள்ளார் அந்த காவல் அதிகாரி. மேலும் இந்த சம்பவத்தை வீடியோவாக செல்போனில் பதிவு செய்துள்ளனர். இதனை அடுத்து போக்குவரத்து காவலர்கள் அவர்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டு காரை விட்டு இறக்கி சட்டையை பிடித்து இழுத்து காவல் நிலையம் அழைத்து சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வீடியோவிலும் பேருந்து உள்பட பல வாகனங்கள் அவ்வழியாக சென்று கொண்டிருக்கிறது. அவர்களை பொருட்படுத்தாமல் காரில் வந்தவர்களை மட்டும் குறிவைத்து குற்றம் சாட்டுவது ஏன் என்ற கேள்விகள் எழுந்து வருகிறது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.