TN Local Body Election 2021: பகல் கனவு காணாதீங்க..! வேட்பாளர்களுக்கு போஸ்டர் ஒட்டி எச்சரிக்கை..
TN Local Body Election 2021: வார்டு மறுவரையறை செய்ய வேண்டியதன் காரணமாக, கடந்த 2019 ஆம் ஆண்டு காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவில்லை.
இந்த நிலையில் இந்த மாவட்டங்களுக்கான உள்ளாட்சி தேர்தல் வரும் அக்டோபர் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. அதன்படி வரும் 6 ஆம் தேதி தென்காசி மாவட்டத்தில் உள்ள கீழப்பாவூர், கடையம், மேலநீலிதநல்லூர், வாசுதேவநல்லூர் ஆகிய ஒன்றியங்களுக்கு முதல் கட்டமாகவும், தென்காசி, செங்கோட்டை, செங்கோட்டை, கடையநல்லூர், சங்கரன்கோவில், குருவிகுளம் ஆகிய ஒன்றியங்களுக்கு 9 ஆம் தேதி இராண்டாம் கட்டமாகவும் தேர்தல் நடைபெற உள்ளது.
தேர்தலுக்கான வேட்பனுதாக்கல் ஒரு பக்கம் விறுவிறுப்பாக நடைபெற்றும் வரும் நிலையில் சில சுவாரஸ்சியமான சம்பவங்களும் அங்கு அரங்கேறி வருகின்றன.. ஆம் குருவிகுளம் ஊராட்சியில் பல்வேறு முறைகேடு புகார்கள் நடைபெற்றதாக தொடர் புகார்கள் எழுந்த நிலையில், அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுவர்களில் சுவரொட்டிகள் பல ஒட்டப்பட்டு உள்ளன.. அதில், ஊராட்சி பதவிகளில் போட்டியிட்டு, ஓட்டுக்கு பணம் கொடுத்து வெற்றி பெற்றவுடன் தேர்தலில் செலவு செய்த பணத்தை ஊராட்சி நிதியில் இருந்து எடுத்து விடலாம் என்றும் யாரும் பகல் கனவு காண வேண்டாம் என்றும் கிராமசபை கூட்டங்களில் பொதுமக்கள் சார்பில் வரவு செலவு கணக்குகள் கேட்கப்படும் என்றும் அவ்வாறு கேட்கப்பட்ட கணக்குகள் மீண்டும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலம் வாங்கப்பட்டு சரிபார்க்கப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
மேலும் இதில் ஊழல் நடைபெற்றது கண்டறியப்பட்டால் ஊழல் ஊழல் செய்தவர் பெயர் புகைப்படம் பதவி போன்றவை குருவிகுளம் இளைஞர்களால் சமூக வலைதளங்களில் பகிரப்படும் என்றும் இதுகுறித்து மாநில லஞ்சம் மற்றும் ஊழல் கண்காணிப்பு தடுப்புத் துறையில் புகார் செய்யப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.. கீழப்பாவூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆவுடையனூர் ஊராட்சி சேர்ந்த மக்களும், ஆலங்குளம் அருகே உள்ள புதுப்பட்டி கிராமத்து இளைஞர்களும் இதே போன்ற வித்தியாசமான அறிவிப்புகளை வெளியிட்டுள்ளனர். இந்த ஊராட்சியில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக புகார்கள் எழுந்த நிலையில், வரும் காலத்தில் அதனை தடுப்பதற்காகவே அந்த ஊராட்சியை சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இவ்வாறான நடவடிக்கையில் ஈடுபட்டதாக கூறினர்.