Made in Tamil Nadu: இனிமே மேட் இன் தமிழ்நாடுதான்!ஸ்டாலின் மாஸ் பேச்சு
Made in Tamil Nadu: இந்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்கள் அமைச்சகம் பல்வேறு ஏற்றுமதி மேம்பாட்டு குழுக்களின் மூலம், நாடு முழுவதும் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வணிக மற்றும் வர்த்தக வார விழாவை விடுதலையின் அம்ரித் மகோத்சவத்தின் ஒரு பகுதியாக ஏற்பாடு செய்து வருகிறது இன்று காலை சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெறவுள்ள மாநில அளவிலான நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமை விருந்தினராக பங்கேற்றார். இந்த, மாநாட்டில், ரூ.2,120.54 கோடி மதிப்பீட்டில் 41,695 நபர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில் 24 தொழில் முதலீடுகளுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலையில் கையெழுத்தானது. இந்த நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் ஊரகத் தொழில்கள் துறை அமைச்சர் தாமோ அன்பரசன் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.