ABP News

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!

Continues below advertisement

பல்லடம் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டறிய முடியாத நிலையில் போலீசார் துப்பாக்கியை காட்டி மிரட்டி குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்வதாக பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர். 


திருப்பூர் மாவட்டம் பல்லடம் அடுத்த அவிநாசி பாளையம் பகுதியில் கடந்த நவம்பர் 28ம் தேதி  ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் கொலை செய்யப்பட்டு எட்டு பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக அவிநாசி பாளையம் போலீசார் 18 தனி படைகள் அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் இதுவரையிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படாத நிலையில் சாதாரண மக்களை பிடித்து குற்றத்தை ஒப்புக்கொள்ள சொல்லி அவிநாசி பாளையம் போலீசார் மிரட்டுவதாக புகார் எழுந்துள்ளது. 

இந்நிலையில் பழவஞ்சிபாளையம் குறவர் காலனியில் வசித்து வரும்  (குறவர்) பழங்குடி சமுதாயத்தை சேர்ந்த ஹரிதாஸ், விஷ்ணு, செல்வமணி, அர்ஜுன், வீர குமார், ராஜாமணி, விஜய் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்டோரை போலீசார் விசாரணை என்ற பெயரில் அழைத்துச் சென்று கொலை குற்றத்தை ஒப்புக் கொள்ளுமாறு அடித்து துன்புறுத்துவதாக புகார் எழுந்துள்ளது. 

அதில் குறிப்பாக ஹரிதாஸ் என்பவருக்கு பெருந்தொழவு பகுதியில் சொந்தமாக வீடு உள்ள நிலையில் திருப்பூரில் ஆட்டோ ஓட்டி வருவதாகவும் நீண்ட தொலைவு என்பதால் சென்றுவர முடியாமல் பூங்கா நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி உள்ளார்.
நவம்பர் 29ஆம் தேதி அன்று பெருந்துறை பகுதியில் இருந்து வீட்டை காலி செய்து பூங்கா நகர் பகுதிக்கு குடி பெயர்ந்து உள்ளார். இதனால் அவரை தனியாக அழைத்து அடித்து துன்புறுத்தி துப்பாக்கியை காட்டி மிரட்டி கொலை குற்றத்தை ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும் பணம் தருவதாகவும் போலீசார் பேசி வருவதாகவும் தங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என பாதிக்கப்பட்ட மக்கள் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram