Tirupathur: தாய்க்கு பாலியல் தொல்லை.. திமுக நிர்வாகிக்கு வெட்டு! சித்தியை கொலை செய்த இளைஞர்!
திருப்பத்தூர் அருகே தாய்க்கு பாலியல் தொல்லை கொடுத்த திமுக துணை தலைவரும், தனது சித்தப்பாவுமான திருப்பதியை வெட்டிய இளைஞர்.. தடுக்க வந்த சித்தியையும் வெட்டிப் படுகொலை செய்த அக்கா மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் அடுத்த மேற்கத்தியானூர் பகுதியை சேர்ந்தவர் திருப்பதி. இவர் திமுக மட்றப்பள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருக்கிறார். இவருக்கு வசந்தா என்கிற மனைவியும் இரண்டு பிள்ளைகளும் இருக்கின்றனர். அவர்கள் இருவரும் வெளியூரில் கல்லூரியில் படித்து வரும் சூழலில், திருப்பதி மற்றும் வசந்தா தம்பதியினர் விவசாயம் செய்து வருகின்றனர்.
இச்சூழலில் தான் கடந்த 7 ஆம் தேதி திருப்பதி வீட்டிற்குள் நுழைந்து அவரையும் அவரது மனைவி வசந்தாவையும் இரண்டு பேர் சர்மாரியாக வெட்டியுள்ளனர். இதில் வசந்தா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இரத்த வெள்ளத்தில் உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடிய திருப்பதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் கொலையாளிகளை பிடிக்க வழக்கு பதிவு செய்து திருப்பத்தூர் டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையில் 3 தனிப்படை அமைத்து தேடி வந்தனர். போலீசார் சிசிடி காட்சிகள் வைத்து விசாரணை மேற்கொண்ட போது வசந்தாவின் அக்கா சாந்தியின் மகன் ரேனுகுமார் மற்றும் அவரது நண்பர் கெவின் ஆகியோர் தான் இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்டனர் என்பது தெரியவந்தது. பின்னர் போலீசாரின் விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.
கொலை செய்த ரேணுகுமார் கொடுத்த வாக்குமூலத்தில்,”எனது தந்தை வடிவேல் மாற்றுத்திறனாளியாக உள்ளார். எனது தாய் சாந்தியை திமுக துணைத்தலைவரும், எனது சித்தப்பாவுமான திருப்பதி என்பவர் பாலியல் தொல்லை கொடுத்து தன்னிடம் வந்து குடும்பம் நடத்துமாறு தொடர்ந்து வற்புறுத்தி வந்தார். நானும் எனது நண்பன் கெவினும் திருப்பதியிடம் நேரில் சென்று இனிமேல் இதுப்போன்ற செயலில் ஈடுப்பட கூடாது என்று சொன்னோம். வாக்குவதம் முற்றவே மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து எனது சித்தப்பாவை சரமாரியாக வெட்டினோம். இதனை தடுக்க வந்த சித்தி வசந்தியையும் சராமரியாக வெட்டினோம்”என்று கூறியுள்ளார்.
தாய்க்கு பாலியல் தொல்லை தந்த திமுக துணைத்தலைவரும், தனது சித்தப்பாவுமான திருப்பதி மற்றும் இதனை தடுக்க வந்த சித்தியை சராமரியாக வெட்டியதில் சித்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.