Thirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!
திருப்பத்தூர் அருகே பெண்ணை கத்தியை காட்டி வாலிபர் ஒருவர் மிரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ காட்சிகள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
திருப்பத்துார் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே கல்லறை மேடு பகுதியை சேர்ந்தவர் மகள் ஜெய சுகந்தி. இவர் கணவனை பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில் இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த முனிரத்தினம் என்பவரின்குடும்பத்தினருக்கும் இடையே முன் விரோதம் இருந்த வந்ததாக சொல்கின்றனர்.
இச்சூழலில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுகந்தி தனியாக இருப்பதை அறிந்த முனிரத்தினத்தின் மகன் தனுஷ் என்பவர் கத்தியுடன் சுகந்தி வீட்டை நோக்கி ஆவேசமாக சென்றுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த சுகந்தி உடனே கதவை மூடியுள்ளார். அப்போது அந்த வாலிபர் ஜன்னல் வழியாக கத்திய காண்பித்து தகாத வார்த்தைகளால் திட்டி சுகந்தி குடும்பத்தினருக்கு மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பவம் குறித்து ஜெய சுகந்தி கொடுத்த புகாரின் பேரில்ஜோலார்பேட்டை போலீசார் தனுஷ் மற்றும் இவரது தாய் ஸ்ரீதேவி இருவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். அதில் தனுஷ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் தலைமறைவான ஸ்ரீதேவியை போலீசார் தேடி வருகின்றனர்.