Temple demolished : விநாயகர் கோயில் இடிப்புகள்ளக்குறிச்சியில் பரபரப்பு நடந்தது என்ன?

Continues below advertisement

கள்ளக்குறிச்சி காந்தி ரோட்டில் பாசன வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட இரு கோவில்கள் இடித்து அகற்றப்பட்டதால் பரபரப்பு நிலவியது. தற்ப்போது கோயில் கோபுரம் முழுமையாக சாயும் கட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.


கள்ளக்குறிச்சியில் பெரிய ஏரியில் இருந்து, காந்திரோடு வழியாக தென்கீரனுார் ஏரிக்கு செல்லும் பாசன வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கோவில்கள் உள்ளிட்ட 36 கட்டடங்களை அகற்ற சென்னை ஐகோர்ட் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டது. பொதுப்பணித்துறை நீர்வளம் அதிகாரிகள் கடந்த 16ம் தேதி, ஆக்கிரமிப்பு கட்டடங்களில் நோட்டீஸ் ஒட்டி, மின் இணைப்புகளை துண்டித்தனர். அதனையொட்டி, ஆக்கிரமிப்பாளர்கள் சிலர், தாமாகவே கட்டடங்களை இடித்து அகற்றினர். 

 

இதை தொடர்ந்து, சக்தி விநாயகர் கோவிலில் இருந்த (கல்-6, உலோகம்-3) 9 சுவாமி சிலைகளை நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். சிலைகளின் உயரம், அகலம், எடை ஆகியவற்றை அறநிலையத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து மினி டெம்போவில் ஏற்றி, பஸ் நிலையம் அருகில் உள்ள பழைய மாரியம்மன் கோவிலுக்கு கொண்டு சென்றனர். சுவாமிக்கு சாற்றப்படும் வெள்ளி கவசங்கள், மணி உள்ளிட்ட உபகரணங்களை கோவில் நிர்வாகத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 

அதேபோல், தர்மசாஸ்தா கோயிலில் இருந்த சுவாமி சிலைகள் அகற்றப்பட்டு, கோவில் நிர்வாகத்தினர் எடுத்துச் சென்றனர். தொடர்ந்து,  4 பொக்லைன் இயந்திரங்கள் மூலம் சக்தி விநாயகர் கோவிலை இடிக்கும் பணி தொடங்கி நடைப்பெற்றது. தற்ப்போது கோயில் கோபுரம் முழுமையாக சாயும் கட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram