Tamilnadu Election | அமலுக்கு வந்த தேர்தல் நடத்தை விதிகள் கட்டுப்பாடுகள் என்னென்ன?

தமிழ்நாடு உட்பட 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருக்கின்றன.

தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, அஸ்ஸாம் மேற்கு வங்கத்துக்கான சட்டமன்றத் தேர்தல் தேதியை இந்திய தலைமைத் தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது.

அதன்படி, தமிழ்நாட்டில் 234 தொகுதிகளிலும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், மே 4-ம் தேதி 5 மாநிலங்களிலும் வாக்கு எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த நிலையில் தேர்தல் தேதி அறிவிப்பைத் தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்திருக்கிறது.

தேர்தல் நடத்தை விதிகளின்படி, இனி மாநில அரசு தேர்தல் ஆணையத்தின் கண்காணிப்பில் இயங்கும்.

புதிய நலத்திட்ட உதவிகள் அறிவிக்கவோ, நிதி ஒதுக்கீடு செய்யவோ முடியாது.

அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் புதிதாக பணிநியமனம் செய்ய முடியாது.

முதலமைச்சர், அமைச்சர்கள் படங்கள் உள்ள அரசு விளம்பரங்கள் நீக்கப்படும்.

அரசு அலுவலகங்களில் தலைவர்களின் படங்கள் மறைக்கப்படும்.

வேட்பாளர்கள் 40 லட்சம் ரூபாய் வரை மட்டுமே செலவு செய்ய அனுமதிக்கப்படும்.

பறக்கும் படை, நிலையான கண்காணிப்பு குழு போன்றவை வேட்பாளர்களின் செலவுகளைக் கண்காணிக்கும்.

அனுமதிக்கப்பட்ட வரம்பை விட வேட்பாளர் அதிகமாக செலவு செய்திருப்பது தெரியவந்தால் அந்த நபர் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்கும்.

வாக்காளர்களுக்கு பரிசுப்பொருள், பணம், மதுபானம் போன்றவை வழங்குவது தேர்தல் நடத்தை விதிப்பது குற்றமாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

பண விநியோகத்தை தடுக்க சாலைகளில் வாகன சோதனை தீவிரப்படுத்தப்படும்.

பொதுமக்கள் உட்பட யாராக இருந்தாலும் உரிய ஆவணங்களின்றி 50,000 ரூபாய் கையில் ரொக்கமாகக் கொண்டு சென்றால் பறிமுதல் செய்யப்படும்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola