Tamil Nadu Student Joins Ukraine Forces : உக்ரைன் ராணுவத்தில் தமிழக மாணவர்! பின்னணி என்ன?

Continues below advertisement

Tamil Nadu Student Joins Ukraine Forces : உக்ரைனில் போர் நடந்து வரும் இந்த சூழ்நிலையில் அந்நாட்டு துணை ராணுவ படை ஒன்றில் சாய் நிகேஷ் இணைந்துள்ளார். சிறுவயதிலிருந்தே சாய் நிகேஷ்க்கு இந்திய ராணுவத்தில் சேர வேண்டும் என்ற ஆர்வம் இருந்து வந்துள்ளது. ஆனால் உயரம் குறைவு காரணமாக அவர் தேர்ந்தெடுக்கப்படாத சூழ்நிலையில் மேல் படிப்புக்காக உக்ரைன் சென்றுள்ளார். இந்த நிலையில் அங்கு தற்போது உக்ரைன் துணை ராணுவப்படையில் சேர்ந்துள்ளார். தன் மகனை எப்படியாவது மீட்டு கொடுத்து விட வேண்டும் என இந்திய அரசுக்கு அவரது பெற்றோர் கோரிக்கை வைக்கின்றனர். கோவையை சேர்ந்த சாய் நிகேஷ் கடந்த 4 ஆண்டுகளாக உக்ரைனில் விமான பொறியியல் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram