Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ

சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் போலீஸ் விசாரணையின் போது அஜித் குமார் என்ற இளைஞர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில் அஜித் குமார் காவலர்களிடம் இருந்து தப்பிப்பதற்கு முயற்சி செய்த போது வலிப்பு வந்து இறந்தாக நேற்று போலீஸார் FIR பதிவு செய்த நிலையில், திருப்புவனம் கோவிலில் உள்ள கோசாலையில் வைத்து அஜித்குமாரை இரண்டு காவலர்கள் கொடூரமாக தாக்கிய வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனிடையே, இந்த வழக்கு தொடர்பான நீதிமன்ற விசாரணையில் சிறப்புப்படை எந்த அடிப்படையில், யார் சொல்லி இந்த வழக்கை கையிலெடுத்தனர்? யார் இந்த வழக்கை ஒப்படைத்தனர்? அவர்களாகவே இந்த வழக்கை கையிலெடுத்து விசாரிக்க முடியுமா? உயர் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டுமென முழுமையான விபரங்களை மறைக்கக்க்கூடாது என்று  நீதிபதிகள் அடுகடுக்கான கேள்விகளை முன்வைத்துள்ளனர்.

முன்னதாக, திமுகவினர் மற்றும் டிஎஸ்பி தரப்பு அஜித்குமார் குடும்பத்தினரிடம் 50 லட்சம் ரூபாய் பேரம் பேசியதாக மனுதாரர் தரப்பு நீதிமன்றத்தில் வாதத்தை முன்வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola