SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்

Continues below advertisement

டெல்லியில் நடைபெறும் நீட் தேர்வுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட அனுமதி இன்றி கல்லூரிக்குள் நுழைந்த இந்திய மாணவர் சங்க (SFI) நிர்வாகிகளுக்கும் காவல்துறையினருக்கும் இடையே ஏற்பட்ட கடும் தள்ளுமுள்ளு காரணமாக திருவொற்றியூர் பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

திருவொற்றியூர் அரசு கல்லூரியில் எஸ் எப் ஐ அமைப்பை சேர்ந்த மாணவர்கள் சுமார் 20 பேர் கையில் கொடியுடன் கல்லூரி வளாகத்திற்குள் வந்து மாணவர்களை நீட் தேர்வு விவகாரம் குறித்து டெல்லியில் போராடி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து போராட்டத்திர்க்கு அழைத்ததால் காவல்துறைக்கும் எஸ் எப் ஐ மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்டது 

காவல் ஆய்வாளர் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட காவலர்களுக்கும் எஸ் எப் ஐ மாணவர்களுக்கும் தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில் எஸ்எப்ஐ மாணவர்கள் இமானுவேல சஞ்சய் உட்பட நான்கு மாணவர்களை காவல்துறையினர் அழைத்துச் சென்றதால் காவல்துறை அதிகாரியிடம் வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர்.

இந்த சம்பவத்தில் காவல்துறையினர் நான்கு மாணவர்களை வாகனத்தில் ஏற்றி காவல் நிலையம் அழைத்துச் சென்றதை கண்டித்து வாக்குவாதம் அரசு கல்லூரி மாணவர்களை போராட்டத்திற்கு எப்படி அழைக்கலாம் என போலீஸ் அதிகாரிக்கும் போராட்டக்காரர்களுக்கும் வாக்குவாதம்


இதனால் கல்லூரி நுழைவாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola