Sattai Durai murugan Arrest: வதந்தி பரப்பிய விவகாரம்..சாட்டை துரைமுருகன் மீண்டும் கைது!

Sattai Durai murugan Arrest: சமூக வலைதளங்களில் அமைதியை சீர்குலைக்கும் வகையில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து பதிவிட்டதாக சாட்டை துரைமுருகன் மீது புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில் கைது செய்யப்பட்ட சாட்டை துரைமுருகன் இன்று திருவள்ளூர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை வரும் ஜனவரி 3-ந் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கனவே, கடந்த சில மாதங்களில் அவதூறு கருத்துக்களை பதிவிட்டதற்காக சாட்டை துரைமுருகன் கைது செய்யப்பட்டு, சமீபத்தில்தான் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola