RS Bharathi vs Minister Ramesh : சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கு இல்ல RS பாரதியை வெளுத்த அமைச்சர்

Continues below advertisement

திமுக-வைச் சேர்ந்த ஆர்.எஸ்.பாரதி, தவெக அமைச்சர் ரமேஷை பார்ப்பான் என சாதியைக் குறிப்பிட்டு சர்ச்சையாகப் பேசிய நிலையில், "உங்களைப் போல பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை" என ரமேஷ் பதிலடி கொடுத்திருக்கிறார்.

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் தவெக-வில் இணைந்தனர்.

மாமல்லபுரத்தில் நடந்த இந்த நிகழ்ச்சியில் பேசிய இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், "திமுக இவரு பாப்பா மாடல்... தொட்டதுக்கெல்லாம் அழுவுறாங்க" என்று விமர்சித்திருந்தார்.

இவ்வாறிருக்க, நேற்று செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, "இந்த பாப்பான்களுக்கெல்லாம் நாங்கள் பதில்சொல்லா வேண்டியதில்ல" என்று அமைச்சர் ரமேஷ் குறித்து சர்ச்சையாகப் பேசினார்.

இந்த நிலையில், ரமேஷ் தனது எக்ஸ் தளப் பதிவு மூலம் ஆர்.எஸ்.பாரதிக்கு பதிலடி கொடுத்திருக்கிறார்.அந்தப் பதிவில், "பாப்பானுக்கு பதில் சொல்ல மாட்டேன் என சொல்பவருக்கு முதலில் எனக்கு பதில் சொல்ல திராணி இருக்கிறதா? 

உங்களை போல தந்தை பெரியாரை வழிகாட்டி என்று சொல்லிக்கொண்டு,  சமூக நீதி என பொய் வேடம் போட்டு மக்களை ஏமாற்றி ஒரு குறிப்பிட்ட சமூகத்துக்கோ, அடித்தட்டு மக்களுக்கோ அல்லது வாக்கு அரசியலுக்கோ சாதியை வைத்து பிழைக்கும் பழக்கம் எனக்கில்லை. 

சாதியை வைத்து நீங்கள் நடத்தும் போலி அரசியல் பிழைப்புக்கு தான் தந்தை பெரியாரின் தடி மூலம் தேர்தலில் தோல்வி அடி விழுந்திருக்கிறது என்பதை நினைவுபடுத்தி பேசுவது நல்லது. 

கொள்கைப் பிடிப்போடு, கொள்கைத் தலைவர்களை மனதில் ஏற்று, கடினமாக உழைத்து அதிகாரத்துக்கு வந்த எங்களுக்கு எதிராக, ஒரு குடும்ப ஆதிக்கத்துக்கு கொத்தடிமைகளாக வாழும் உங்களுக்கு முதலில் பதில் சொல்ல என்ன தகுதி இருக்கிறது" என்று காட்டமாக விமர்சித்திருக்கிறார்.a

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola