Radhika Sarathkumar complaint on Sivaji Krishnamurthy : சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா புகார்!

Continues below advertisement

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் பரபரப்பு புகார் அளித்துள்ளார். தேர்தல் பரப்புரையின்போது அவதூறாக பேசியதாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

ராதிகா, அவரது கணவர் சரத்குமார் குறித்து அவமதிக்கும் வகையில் பேசியுள்ளார். ராதிகா குறித்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசியவை வீடியோக்களாக சமூக வலைதளங்களில் வைரலாகின. இதை கடுமையாக விமர்சித்த ராதிகா, "ஏன் டா படுபாவி! ஜெயிலுக்கு போயும் நீ திருத்த மாட்டியா? உன்னை எல்லாம் இன்னும் அந்த கட்சியில் வெச்சிருக்காங் களே. அவங்களதான் குத்தம் சொல்லணும்.

இதுல உனக்கு அந்த சாம்ராஜ்ய சக்ரவர்த்தியோட பேரு வேற! உன்னை மாதிரி ஆட்கள் எல்லாம் கடுமையாக தண்டிக்கப்படனும். இதற்கு திமுகவும் ஸ்டாலினும் உதயநிதி ஸ்டாலினும் வெட்கப்பட வேண்டும். அவமானகரமானது" என எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த நிலையில், சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் ராதிகா தரப்பில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. சர்ச்சையாக பேசி சிறைக்கு சென்ற சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, தற்போது மீண்டும் ஒரு சிக்கிலில் சிக்கியுள்ளார். இந்த விவகாரத்தில் அவர் கைது செய்யப்படுவாரா என கேள்வி எழுந்துள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram