ABP News

Parandur Airport Protest | “உசுர விட்றுவோம்” கதறிய பரந்தூர் மக்கள்.. இழுத்துச் சென்ற போலீஸ்

Continues below advertisement

உயிரை மாய்த்துக் கொள்வதை தவிர எங்களுக்கு வேறு வழி இல்லை அசம்பாவிதம் நடந்தால் மாவட்ட நிர்வாகமே பொறுப்பு என பரந்தூர் கிராம மக்கள் எச்சரிக்கை விடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது,


காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்றியுள்ள  20 கிராம பகுதிகளை உள்ளடக்கிய பகுதிகலில் பரந்தூர் விமான நிலையம் அமைக்கப்படும் என மத்திய மாநில அரசுகள் அறிவிப்பு வெளியிட்டு அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்தநிலையில் விமான நிலையம் அமைக்க  தேவையான நிலங்கள் எந்தெந்த கிராமங்களில், எவ்வளவு எடுக்கப்படுகிறது என வரையறுத்து நில எடுப்பு அறிவிப்புகளை தமிழ்நாடு தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை அறிவிப்புகளை நாளிதழ்களில் வெளியிட்டு வந்தது.

இந்த  நிலையில் விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களை 764-வது நாள்களாக தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.ஏகனாபுரத்தில் உள்ள நிலங்களின் வகைகள் சர்வே எண்கள் கிராம மக்களின் பெயர்கள் உள்ளிட்டவை குறிப்பிட்டு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நில எடுப்பது குறித்து ஆட்சேபனை இருந்தால் 30 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் தெரிவிக்கலாம் என அறிவிப்பு வெளியாகி உள்ளது .

இந்த அறிவிப்பு ஏகனாபுரம் கிராம மக்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் இன்று ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற, மாலை நேரம் போராட்டத்தை தீவிரமாக ஏகனாபுரம் கிராம மக்கள் நடத்தினர். எப்பொழுதும் கோயில் அருகே போராட்டம் நடைபெறும் நிலையில் இன்று, அம்பேத்கர் சிலை சிலை முன்பு பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். 

 அப்போது பேசிய கிராம மக்கள் தொடர்ந்து எங்கள் எதிர்ப்பை தெரிவித்து வரும் நிலையில் திருட்டுத்தனமாக அதிகாரிகள், கணக்கெடுப்பை நடத்தி பின் வாசல் வழியாக எங்கள் கிராம நிலத்தை கையகப்படுத்துவேன் என அறிவித்திருப்பது அதிர்ச்சியை அளிக்கிறது.  காவல்துறை ஒருபுறம் எங்களுடன் இணக்கமாக செல்ல முயற்சி செய்தாலும் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட நிர்வாகம் எங்களுக்கு எதிராக இருக்கிறது ‌ . இந்த அறிவிப்பை திரும்ப பெற வேண்டும் இனி எந்தவித அறிவிப்பும் வரக்கூடாது. அப்படி வந்தால் நாங்கள் உயிரை மாய்த்துக்கொள்ளும் எல்லைக்கும் செல்ல தயார் . அப்படி ஏதாவது அசம்பாவிதம் சம்பவங்கள் நடைபெற்றால் அதற்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் அரசுதான் பொறுப்பு என ஆக்ரோஷமாக தெரிவித்திருந்தனர். 


இதனை தொடர்ந்து அந்த கிராம மக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் மற்றும் கிராம மக்களை வலுக்கட்டாயமாக இழுத்துச் சென்று போராட்டத்தை போலீசார் கலைத்தனர். இதனால் போலீசார் மற்றும் பொதுமக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola