PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
பெண் செய்தி வாசப்பாளருக்கு வேலை வாங்கித்தருவதாக கூறி பாலியல் சீண்டலில் ஈடுப்பட்ட பிரபல தொழிலதிபர் பி.ஆர் சுந்தரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தொழிலதிபர் மற்றும் பங்குச்சந்தை நிபுணரான பி.ஆர் சுந்தர், இவர் மான்சன் கன்சல்டன்சி என்ற நிறுவனம் மூலம் பங்கு சந்தை தொடர்பாக ஆன்லைன் மற்றும் யூடியூப் மூலம் ஆலோசனைகள் மற்றும் வகுப்புகள் எடுத்து வருகிறார். மேலும் ஏற்றமதி மற்றும் இறக்குமதி தொழில் செய்து வருகிறார்.
கடந்த 2021ம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி ஒன்று பெண் செய்தி வாசிப்பாளரை தொழிலதிபர் பி.ஆர்.சுந்தரத்தை நேர்காணல் எடுக்க அனுப்பியுள்ளனர். அதன் மூலம் தொழிலதிபருக்கு பெண் செய்தி வாசிப்பாளர் பழக்கமாகியுள்ளார்.
அதன்பின் அடிக்கடி தொழிலதிபர் வீட்டிற்கு சென்று அவரிடமும் அவரது மனைவியுடம் பேசி வந்ததாகவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் அவர்களின் நட்பு வளர நட்பின் அடிப்படையில் தொழிலதிபரிடம் பெண் செய்தி வாசிப்பாளர் வேலை கேட்டுள்ளதாக கூறப்படுகிறது அதன்படி ஒரு நாள் பெண் செய்தி வாசிப்பாளரை பட்டினப்பாக்கம் அடுக்குமாடி வீட்டிற்கு தொழிலதிபர் அழைத்து தவறாக நடந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட பெண் செய்தி வாசிப்பாளர் பி.ஆர் சுந்தரின் மனைவியிடம் இதைப்பற்றி தெரிவிக்க அவரது மனைவி இதை கண்டுக்கொள்ள்வில்லை என கூறப்படுகிறது.
அதன்பின்னர் கடந்த ஜூன் 29ம் தேதி தொழிலதிபர் பெண் செய்தி வாசிப்பாளரிடம் நடந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறி மீண்டும் அழைத்துள்ளார். அதை நம்பி பெண் செய்தி வாசிப்பாளரும் அவரது அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.
அப்போது 3 மணி நேரம் அறையில் அடைத்து வைத்து பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும், அப்போது அவரது மனைவியும் இதுகுறித்து வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதனால் அச்சமடைந்த பெண் செய்தி வாசிப்பாளர் ஐஸ்அவுஸ் காவல் நிலையத்தில் தொழிலதிபர் பி.ஆர்.சுந்தர் மற்றும் அவரது மனைவி மீது புகார் அளித்தார். அவரது புகாரை அடுத்து போலீசார் விசாரணையில் இறங்கினர்.
விசாரணை செய்த சென்னை ஐஸ் ஹவுஸ் காவல் நிலைய போலீசார், தொழிலதிபர் பி.ஆர் சுந்தர் மீது பாலியல் தொல்லை, பெண் வன்கொடுமை தடுப்புச் சட்டம், மிரட்டல் உள்ளிட்ட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த விவகாரத்தில் பி.ஆர் சுந்தருக்கு ஆதரவாக செயல்பட்டதாக அவரது மனைவி மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தொழிலதிபர் பி.ஆர்.சுந்தரிடம் விசாரணை செய்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீசார் திட்டமிட்டு வருகின்றனர். இந்த வழக்கில் பி.ஆர்.சுந்தர் தற்போது பெங்களூருவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் பி.ஆர்.சுந்தர் தன்மீது வைக்கப்பட்டுள்ள குற்ற்ச்சாட்டுக்கள்,உள்நோக்கம் கொண்ட புகார்களுக்கும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கும் பலியாகிவிட்டேன். காலம்தான், எல்லா உண்மையும் வெளிவரும். அதுவரை, வெறுப்பாளர்களும் சில ஊடகங்களும் மகிழட்டும் என தனது டிவிட்டரில் பதிவாக வெளியிட்டுள்ளார்.