Namma Ooru Thiruvizha: சங்கமத்துக்கு செக்! அப்செட்டில் கனிமொழி?
Chennai Sangamam: தை திருநாட்களான ஜனவரி 15, 16, 17 ஆகிய தேதிகளில் சென்னையில் 3 நாட்களுக்கு ‘நம்ம ஊர் திருவிழா’(Namma Ooru Thiruvizha) என்ற பெயரில், பிரம்மாண்ட கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படும் என நேற்று தங்கம் தென்னரசுவை அமைச்சராக கொண்ட தமிழக கலை பண்பாட்டு பேரவை அறிவிப்பை வெளியிட்டது இந்த அறிவிப்பால் திமுக மகளிரணி செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி கடும் அதிருப்தி அடைந்திருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. ஏனென்றால், கனிமொழி முன்னெடுப்பால், கடந்த 2007ஆம் ஆண்டு திமுக ஆட்சியின்போது பொங்கல் திருநாளை சிறப்பிக்கும் விதமாக, சென்னையில் அரசு சார்பில் ‘சென்னை சங்கமம்’(Chennai Sangamam) என்ற பெயரில் கலை பண்பாட்டு திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வந்தார். இந்நிலையில், 2011ஆம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, அதிமுக ஆட்சியை பிடித்த நிலையில், கடந்த 10 வருடங்களாக ‘சென்னை சங்கமம்’ நிகழ்ச்சி முடக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்றிருக்கும் நிலையில், சென்னை சங்கம் நிகழ்ச்சியை இந்த பொங்கல் முதல் நடத்த கனிமொழி திட்டமிட்டிருந்தார் இந்நிலையில், ‘சென்னை சங்கமம் – திருவிழா, நம்ம தெருவிழா’ என்ற நிகழ்ச்சிக்கு மாற்றாக ‘நம்ம ஊர் திருவிழா’ என்ற பெயரில் பொங்கலன்று 3 நாட்களுக்கு சென்னையில் கலை பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறும் என தமிழக அரசால் அறிவிக்கப்பட்டிருக்கிறது.