Palani Drunken Women: சுக்குநூறான POLICE பூத்.. அடித்து நொறுக்கிய பெண்.. பழனியில் பரபரப்பு!
பழனி பேருந்து நிலையத்தில் உள்ள போலிஸ் பூத்தை மது போதையில் பெண் ஒருவர் அடித்து நொறுக்கிய சம்பவம் அதிர்ச்சியை பழனியில் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்ட பெண்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி பேருந்து நிலையத்தில் போலீஸ் பூத் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இரவு பணியில் காவலர்கள் ரோந்து சென்றிந்த போது அங்கு மது போதையில் வந்த பெண் ஒருவர் திடீரென போலிஸ் பூத்தில் இருந்த டேபிள் ,சேர் ,உள்ளிட்ட பொருட்களை அடித்து நொறுக்கியுள்ளார் . பின்னர் அருகில் இருந்த கட்டையை எடுத்து அங்கு குரைத்த நாயை அடித்தும் ,துரத்தி கொண்டு ஒடிய பெண் டீ கடை டேபிள்களை தட்டியும் அங்கிருந்தவர்களிடம் தகறாரிலும் ஈடுபட்டடுள்ளார்.
பின்னர் அங்கு வந்த ஆட்டோ ஒட்டுநர்கள் கட்டையை பிடுங்க முயற்சி செய்துள்ளனர். ஆனால் அவர்களால் முடியாமல் போகவே ரகளையில் ஈடுபட்ட பெண்ணை கைது செய்யச் சொல்லி போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மது போதையில் இருந்த பெண்ணை சமாதான படுத்த முயற்சித்தும் முடியாமல் போக பெண்ணின் மீது தண்ணீரை ஊற்றினர். மேலும் அந்த பெண் குடிபோதையில் தரையில் படுத்து அட்டகாசத்தில் ஈடுபட்ட காட்சிகள் சமூக வலைதளத்தில் பரவி பழனியில் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது