Nellai Boy Murder : வாஷிங் மெஷினில் சடலம்..சிறுவனக்கு நடந்த கொடூரம்! எதிர்வீட்டு பெண்ணின் சதி

Continues below advertisement

வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த மூன்று வயது சிறுவனை எதிர்வீட்டு பெண் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செய்வினை மூடநம்பிக்கையால் இந்த கொலை நடந்ததாக கூறப்படுகிறது. 

நெல்லை மாவட்டம் இராதாபுரம் அருகே ஆத்தூர் குறிச்சியை சேர்ந்த விக்னேஷ்- ரம்யா தம்பதியின் 3 வயது மகன் சஞ்சய் வீட்டின் முன்பு காலை 9:30 மணி அளவில் விளையாடிக் கொண்டிருந்துள்ளார். பின்பு அவரை அங்கன்வாடியில் விடுவதற்காக தாய் ரம்யா தேடி உள்ளார். அப்போது குழந்தை அங்கு இல்லாததால் பதறிப் போய் அனைவரது வீடுகளுக்கும் சென்று தேடியுள்ளார். 

எங்கு தேடியும் சிறுவன் கிடைக்காததால் இராதாபுரம் போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரித்த போது, சிறுவனின் எதிர் வீடு பூட்டிய நிலையில் இருந்துள்ளது. எதிர் வீட்டில் வசித்து வந்த தங்கமாளுக்கும் இந்த தம்பதியினருக்கும் இடையே மனக்கசப்பும், முன் விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. அதனால் அந்த வீட்டில் மட்டும் சிறுவனை தேடாமல் விட்டுள்ளனர்.

இதனால் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்தேகத்தின் பேரில், அந்த வீட்டிற்குள் சென்ற போது தங்கம்மாள் வாஷிங் மெஷினில் இருந்து ஒரு சாக்கை வெளியே எடுத்து வைத்து விட்டு தப்பியோடியுள்ளார். சாக்கை பிரித்துப் பார்த்தபோது சிறுவன்  சஞ்சய் சடலமாக இருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். 

பின்பு அங்கு இருந்த இடிந்து வீடு ஒன்றில் ஒளிந்திருந்த தங்கம்மாளை போலீசார் கைது செய்து செய்தனர். அப்போது அவர் தெரியாமல் செய்துவிட்டேன் என்றவாறு கை கூப்பியவரே போலீசாரிடம் பேசியுள்ளார். மேலும் சம்பவம் குறித்து அந்த கிராம மக்களிடையே விசாரணை நடத்திய போது தங்கமாளினுடைய மகன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் சிக்கி உயிரிழந்ததாகவும் அந்த ஈமச்சடங்கில் இந்த விக்னேஷ் தம்பதியினர் கலந்து கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது. விக்னேஷ் தம்பதி செய்வினை வைத்ததால் தான் தன் மகன் விபத்தில் இறந்துவிட்டதாக தங்கம்மாள் ஆத்திரத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. 

மேலும்  மனவிர்த்தியில் தங்கமாள் தனிமையிலேயே வீட்டில் இருந்துள்ளார். வெளியே யாரிடமும் அதிகமாக பேச மாட்டார் என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram