ABP News

Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்

Continues below advertisement

’’நீங்கள் வரும் பொழுது மட்டும் தான் சாப்பாடு நல்லா இருக்கும், நாளைக்கு சாம்பார் தண்ணீ மாதிரி இருக்கும்…’’ என பள்ளி மாணவர்கள் ஆய்வுக்கு வந்த ஆட்சியரிடம் புகார் அளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த முள்ளுக்குறிச்சி அரசு பழங்குடியினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தேசிய தொல்குடியினர் தினத்தை முன்னிட்டு மரம் நடும் நிகழ்வு நடைபெற்றது. இதில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா மற்றும் சேந்தமங்கலம் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டு பள்ளி வளாகத்தில் மரங்களை நட்டு வைத்தனர். 

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் உமா,புதிதாக திறக்கப்பட்ட பழங்குடியினர் பள்ளி மாணவர் விடுதிஉள்ளே சென்று ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது திறக்கப்பட்டு இருந்த அறையின் உள்ளே சென்று பார்த்த போது அறை முழுவதும் ஒட்டடை இருந்ததை கண்டு மாவட்ட ஆட்சியர் விடுதி கண்காணிப்பாளரிடம் அழைத்து ஒட்டடைகளை நீக்க உத்தரவிட்டார். மேலும் மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறை மற்றும் அறைகளை பார்வையிட்டு மாணவரிடம் குறைகளை கேட்டிருந்தார். பின்னர் மதிய  உண்பதற்கு  வந்த மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கி உணவுகளை சோதனை மேற்கொண்டார். தொடர்ந்து மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுவை ஆட்சியர்  சாப்பிட்டு பார்த்தார்.

பின்னர் மாணவர் ஒருவர் நீங்கள் வரும் பொழுது மட்டும் தான் உணவு நன்றாக இருக்கும், நாளை தண்ணீர் போல் இருக்கும் என மாணவர் மாவட்ட ஆட்சியிடம் கூறினார்.இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram