காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News

தொடர் கொலைகளால் கிராமத்தையே காலி செய்யும் மக்கள் . ஒருவர் மட்டுமே உறுதியுடன் கிராமத்தில் வசித்து வருகிறார். 

சிவகங்கையிலிருந்து 15 கிமீ தொலைவில்  அமைந்துள்ள நாட்டாகுடி என்ற கிராமம், இன்று மிகவும் வேதனையூட்டும் நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளது. ஒரு காலத்தில் 5,000-க்கும் மேற்பட்ட மக்கள் வாழ்ந்த இந்த ஊரில், தற்போது தங்கராஜ் என்ற ஒரே ஒரு முதியவர் மட்டுமே வாழ்ந்து வருகிறார்.

அரசின் நீர்வழங்கல் திட்டங்கள் செயலிழந்ததால், நீண்ட காலமாக குடிநீர் வரத்து இல்லாதது, ஊரையே வதைக்க ஆரம்பித்தது. குடிநீர் இல்லாததுடன், சுகாதார சேவைகளும் பின்பற்றவில்லை. இதனால், வயிற்றுப்போக்கு, தொற்றுநோய்கள், மனஅழுத்தம் எனப் பல்வேறு பிரச்சனைகள் அடிக்கடி எழுந்தன. இந்த சூழ்நிலையில், வேலைவாய்ப்பும் வசதிகளும் இல்லாததால் இளைஞர்கள் மற்றும் குடும்பங்கள் அருகிலுள்ள நகரங்களுக்கு இடம்பெயர்ந்தனர்.

இது மட்டுமல்ல, சமீபத்தில் இரு முதியவர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம், மீதமிருந்த மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து, பாதுகாப்புக் கேட்ட நிலையில் மற்ற மூதாட்டிகள் மற்றும் முதியவர்களும் ஊரை விட்டு வெளியேறினர்.

இப்போது, நாட்டாகுடியில் தங்கராஜ் மட்டும் தான் உறுதியுடன் வாழ்கிறார். அவர் கூறும் போது ஐந்து தலைமுறைக்கு முன்பு 5000 குடும்பம் வாழ்ந்த கிராமம்.அடிப்படை வசதி இல்லாததால் ஊரில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து தற்போது 50 குடும்பங்கள் மட்டுமே வாழ்ந்து வந்தனர் ஏனென்றால் அந்த தண்ணீர் பிரச்சனை அருகில் உள்ள உப்பாற்றில் ஊத்து தோண்டி தண்ணீர் எடுத்து வாழ்ந்து வந்தனர். அங்கு உள்ள இளைஞர்களுக்கும் பெண் கொடுக்க மறுத்து விட்டார்களாம். அதனால் நகர் பகுதிக்கு சென்றதாகவும் கூறுகின்றனர்.

(Byte)

இந்த கிராமத்தில் சமீபத்தில் விவசாயி பட்டப் பகலில் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதனால் பாதுகாப்பு இல்லாத இந்த கிராமத்தில் யாரும் கேட்க ஆள் இல்லாத காரணத்தால் அனைவரும் ஊரைவிட்டு வெளியே செல்கின்றனர் என  வேதனை தெரிவிக்கின்றார்.

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola