MK Stalin om Mahavishnu School speech issue : பள்ளியில் மறுபிறவியா? முதல்வர் போட்ட ORDER! மாணவர்களுக்கு அட்வைஸ்

Continues below advertisement

அரசுப் பள்ளியில் மறுபிறவி பற்றி ஒருவர் சொற்பொழிவு நடத்தியது சர்ச்சையான நிலையில், அறிவியல் வழியே முன்னேற்றத்தின் வழி என்று மாணவர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

தனியார் தொண்டு நிறுவனத்தை நடத்தி வரும் மகாவிஷ்ணு என்பவர்  சென்னை அசோக் நகரில் உள்ள அரசுப் பள்ளியில் மறுபிறவி பற்றி மாணவர்கள் மத்தியில் பேசியது சர்ச்சையில் சிக்கியுள்ளது. மாணவர்களிடம் ஆன்மிக சொற்பொழிவா என்று ஆசிரியர் ஒருவர் வாக்குவாதம் செய்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகிய நிலையில், அமைச்சர் அன்பில் மகேஷை எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். இந்த விவகாரம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் விளக்கமளிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இந்தநிலையில் மாணவர்களுக்கு அறிவுரை வழங்கும் வகையில் முதலமைச்சர் ஸ்டாலின் சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். அதில் மாணவச் செல்வங்கள் அறிந்துகொள்ளத் தேவையான சிறந்த அறிவியல் சிந்தனைகள் தரம் மிகுந்த நமது பாடநூல்களில் இடம் பெற்றுள்ளன. எதிர்காலச் சவால்களை, தன்னம்பிக்கையோடு எதிர்கொள்ளவும், அறிவாற்றலைக் கூர்மைப்படுத்திக் கொள்ளவும் தேவையான சிறப்பான கருத்துகளை ஆசிரியர்களே எடுத்துக்கூற முடியும். அதற்குத் தேவையான புத்தாக்கப் பயிற்சியை, சமூகக் கல்வியை - தக்க துறைசார் வல்லுநர்கள், அறிஞர் பெருமக்களைக் கொண்டு வழங்கத் தேவையான முயற்சிகளைப் பள்ளிக்கல்வித் துறை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாட்டின் எதிர்காலச் சந்ததியினரான நம் பள்ளிக் குழந்தைகள் அனைவரும், முற்போக்கான - அறிவியல் பூர்வமான கருத்துகளையும் வாழ்க்கை நெறிகளையும் பெற்றிடும் வகையில், மாநிலத்தில் உள்ள பள்ளிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளை வரைமுறைப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகளை வகுத்து வெளியிட நான் ஆணையிட்டுள்ளேன். தனிமனித முன்னேற்றம், அறநெறி சார்ந்து வாழ்தல், சமூக மேம்பாட்டுக்கான சீரிய கருத்துகள்தான் மாணவர்களின் நெஞ்சங்களில் விதைக்கப்பட வேண்டும். கடந்த மூன்றாண்டுகளில், எண்ணற்ற விழாக்களில் கல்வியின் உன்னதத்தையும் - அறிவியல்பூர்வமான சிந்தனைகளை வளர்த்தெடுக்க வேண்டியதன் அவசியத்தையும் தொடர்ந்து வலியுறுத்தியுள்ளேன். அறிவியல் வழியே முன்னேற்றத்துக்கான வழி!” என்று கூறியுள்ளார்.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram