Mia Khalifa Banner : பால்குடம் எடுக்கும் மியா கலிஃபா..அம்மன் திருவிழாவில் சர்ச்சை..போலீஸ் அதிரடி

Continues below advertisement

காஞ்சிபுரத்தில் மியா கலிஃபா பால்குடம் எடுப்பது போன்று திருவிழா பேனரில் வைக்கப்பட்டிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

ஆடி மாதங்களில் நடைபெறும் அம்மன் கோயில் திருவிழாக்கள் இளைஞர்கள் இடையே பெரும் வரவேற்பை பெறும். ஆண்டிற்கு ஒருமுறை நடைபெறும் இந்த திருவிழாவில் வெளியூர் சென்று வேலை செய்யும் இளைஞர்கள் அனைவரும் கிராமங்களில் கூடுவது வழக்கம். அதேபோன்று திருவிழாக்களில் இளைஞர்களின் பங்கும் மிக இன்றியமையாளராக இருக்கும். திருவிழாக்களில் பல வேலைகளையும் செய்யும் இளைஞர்கள் பேனர் வைப்பது, என்பது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. ஊர் மக்களின் கவனத்தை பெறுவதற்காக நூதன முறையில் பேனர்களையும் இளைஞர்கள் வைப்பார்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை பகுதியில் ஆடி மாத வெள்ளிக்கிழமை முன்னிட்டு, நாகாத்தம்மன் மற்றும் செல்லியம்மன் ஆலயத்தில் வளைகாப்பு வைபோக விழா நடைபெறுகிறது.இந்தநிலையில் கிராமத்தை சேர்ந்த ஒரு சில இளைஞர்கள் திருவிழாவை முன்னிட்டு நூதன முறையில் பேனர் வைத்துள்ளனர். அந்த பேனரில் ஆதார் கார்டு வடிவில் பேனர் வைத்தவர்களின் புகைப்படம் மற்றும் பெயர் உள்ளிட்ட தகவல்கள் இடம்பெற்றுள்ளன. 'எங்க பாசம் ஊரே பேசும்' என்ற வாசகங்களுடன் பேனர் அமைக்கப்பட்டுள்ளது. இதில் அம்மன் புகைப்படங்கள் இடம் பெற்று இருக்கும் அதே வேளையில், பிரபல ஆபாசப்பட நடிகை மியா காலிஃபா மஞ்சள் உடையில் பால்குடம் எடுத்துச் செல்லும் புகைப்படம் இடம்பெற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

பொதுவாக திருவிழாக்களில் சினிமா நடிகர்களின் புகைப்படங்கள் இடம் பெறுவது வழக்கமான ஒன்றாக உள்ளது. ஆனால் இந்த பேனரில் வைக்கப்பட்டுள்ள புகைப்படத்தில் மியா கலிஃபா இடம் பெற்று இருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. இளைஞர்களுக்கு மியா கலிஃபா பத்தி தெரிந்திருக்கலாம், ஆனால் கிராம பெரியோர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு என்பதால் கிராம பெரியவர்களும் அதை கவனிக்காமல் விட்டிருக்கிறார்கள். இந்தநிலையில் இந்த பேனர் குறித்த புகைப்படம் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. 'எங்க பாசம் ஊரே பேசும் ' என அவர்கள் வைத்த டயலாக் தற்பொழுது அவர்களுக்கு எதிராகவே திரும்பி உள்ளது. மியா கலிஃபாவால் தற்பொழுது தமிழ்நாடு அவர்களை பற்றி பேச துவங்கியுள்ளது. இளைஞர்கள் என்றால் சேட்டை செய்வது வழக்கம்தான், ஆனால் இது சற்று எல்லை மீறிய செயல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இந்தநிலையில் காவல்துறையின் அறிவுறுத்தலின் படி  மியா கலிஃபா பேனர் தற்போது அகற்றப்பட்டுள்ளது என்பது குறிப்பிடதக்கது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram