Manickam Tagore Thanks Sellur raju : ராகுலை புகழ்ந்த செல்லூர் ராஜூ! நன்றி சொன்ன தாகூர்!
தான் பார்த்து ரசித்து நெகிழ்ந்த இளம் தலைவர் குறிப்பிட்டு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு ராகுல் காந்திக்கு புகழாரம் சூட்டி எக்ஸ் வளைதள பக்கத்தில் ஒரு வீடியோவை பதிவிட்டுள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பொதுவாகவே அரசியல் குறித்து அவர் கூறக்கூடிய அனைத்து விஷயங்களும் சமூக வலைத்தளங்களில் டெரண்டாவது வழக்கமான ஒரு விஷயம்.
அந்த வகையில் செல்லூர் ராஜு போட்ட பதிவு ஒன்று அதிமுகவில் புயலை கிளப்பியுள்ளது. நான் பார்த்த நெகிழ்ந்த ரசித்த இளம் தலைவர் என்று பதிவிட்டு அதற்கு கீழே ராகுல் காந்தி உணவருந்தும் வீடியோவை பதிவு செய்துள்ளார். மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என அதிமுக தெரிவிக்காமல் பிரசாரம் செய்தது. இந்த நிலையில் ராகுல் காந்தியை புகழ்ந்து செல்லூர் ராஜூ பதிவிட்டுள்ளார். மேலும் அரசியல் விமர்சகர்கள் சிலர் செல்லூர் ராஜுவின் பதிவை சுட்டிக்காட்டி ராகுல் காந்தியை அதிமுக ஆதரிக்கிறதா எனக் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சி ஒன்று செல்லூர் ராஜுவை தொடர்பு கொண்டு கேட்ட போது எளிமையாக அனைத்து மக்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை ரசித்து பார்த்தேன் . ஒரு முன்னாள் பிரதமரின் மகன் எளிமையாக ஒரு ஓட்டலில் யாருக்கு எந்த ஒரு தொந்தரவும் இன்றி உணவருந்தியது ஆச்சிரியாமாக இருந்தது அதனால் தான் பதிவிட்டேன்.
மேலும் அதிமுகவிற்கும் உங்களுக்கு எதோ பிளவோ என்று நினைத்தோம் என கேக்க அதிமுகவே நாங்க தான் என செல்லூர் ராஜூ அந்த பதிவுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.
செல்லூர்ராஜுவின் பதிவை குறிப்பிட்டு காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் அண்ணனுக்கு நன்றி என்று பதிவிட்டுள்ளார்.