Usury Interest Issue: தொடரும் கந்துவட்டி கொடுமை..திருவாரூரில் நடந்த சோகம்

Continues below advertisement

Usury Interest Issue: திருவாரூர் விஜயபுரம் மேட்டுப்பாளையம் தெருவை சேர்ந்தவர் 28 வயது இளைஞரான சதீஷ். இவருக்கு உமா என்ற மனைவியும் 9 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சதீஷ் பழைய இரு சக்கர வாகனங்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். சதீஷ் திருவாரூரைச் சேர்ந்த முத்தையன் என்பவரிடம் குடும்ப செலவுக்காக தொடர்ந்து கடன் வாங்கி வந்துள்ளார். இதுவரை முத்தையனிடம் ஒன்றரை லட்ச ரூபாய் சதீஷ் கடன் வாங்கி உள்ளதாக தெரியவருகிறது.

இந்த நிலையில் கடந்த நான்கு மாத காலமாக கொரோனா ஊரடங்கு காரணத்தால் தொழில் சரியாக செய்ய முடியாத நிலையில் சதீஷ் முத்தையனுக்கு தரவேண்டிய மாத வட்டியை தராமல் வந்துள்ளார். இதனால் முத்தையன் தினசரி சதீஷிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சதீஷ் வீட்டின் அருகே நின்று கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பலுடன் முத்தையன் சதீஷை தாக்கி அவர் வைத்திருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை அபகரித்து சென்றதாக அவரது உறவினர்கள் கூறுகின்றனர். சதீஷ் அவமானப்படுத்தியதால் அவர் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அவரது உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

கந்துவட்டி கொடுமையால் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திருவாரூரில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram