Lady DSP Attack : பெண் DSP வயித்தில் குத்து..ESCAPE-ஆன அந்த நபர்! வலை வீசும் போலீஸ்

Continues below advertisement

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் கும்பலாக சூழ்ந்து பெண் டி.எஸ்.பி இடுப்பை பிடித்து இழுத்து வயற்றில் குத்தி, தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளி தாக்குதல் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தநிலையில் பிரச்சனைக்கு காரணமாக இருந்த முருகேசனை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். என்ன காரணத்திற்காக போராட்டகாரர்கள் டி.எஸ்.பி காயத்ரி மீது தாக்குதல் நடத்தினர் என கேள்வி எழுந்துள்ளது.

திருச்சுழி அருகே கமுதி பெருமாள் தேவன் பட்டியை சேர்ந்த காளி குமார் என்ற ஆட்டோ ஓட்டுநர் நேற்று முன்தினம் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.  இச்சம்பவத்தில் 4 பேரை கைது செய்துள்ள போலீசார் மேலும் இருவரை தேடி வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி நேற்று அருப்புக்கோட்டை திருச்சுழி சாலையில் கொலை செய்யப்பட்ட காலி குமாரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். அப்போது அருப்புக்கோட்டை டிஎஸ்பி காயத்ரி தலைமையிலான போலீசார் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றவர்களை தடுத்து நிறுத்த முயற்சித்தனர்.‌ ஆனால் போராட்டக்காரர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.

அதனை தடுக்க முயன்ற அருப்புக்கோட்டை  டிஎஸ்பி காயத்திரி மீது தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மறியலில் ஈடுபட முயன்றவர்களை டி.எஸ்.பி. காயத்ரி தடுக்க முயன்ற போது, ஒருவர் டி.எஸ்.பியின் இடுப்பை பிடித்து இழுத்து வயற்றில் குத்தினார். அப்போது  டி.எஸ்.பி. காயத்ரி பலார் என்று அவரின் கண்ணத்தில் அரைந்தார். அப்போது அங்கிருந்த போராட்டக்காரர்கள், அவரின் தலை முடியை பிடித்து இழுத்து கீழே தள்ளிவிட்டனர். உடனடியாக மற்ற போலீசார், அவர்களைத் தடுத்தனர். இதனால், போலீசாருக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டு அங்கு அசாதாரண சூழல் ஏற்பட்டது. போராட்டக்காரர்கள் அதிக அளவில் இருந்ததால் போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முடியாமல் சிரமப்பட்டனர்.

இந்நிலையில் டி.எஸ்.பியை தாக்கிய பாலமுருகன், முருகேசன், பொன்முருகன், ஜெயராமன் உள்ளிட்ட 8 பேர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 9 பிரிவுகளின் கீழ் அருப்புக்கோட்டை நகர் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு,  7 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் டி.எஸ்.பி-யிடம் முதலில் வம்பிலுத்து பிரச்சனைக்கு காரணமாக இருந்த முருகேசனை போலீசார் தேடி வருகின்றனர். 

இதனிடையே சாலை மறியலில் ஈடுபட்ட 16 அடையாளம் தெரிந்த மற்றும் அடையாளம் தெரியாத 100 நபர்கள் என 116 பேர் மீது  இரு சார்பு ஆய்வாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக ஒன்று கூடியது, தடையை மீறி மறியலில் ஈடுப்பட்டது உள்ளிட்ட இருவேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram