Elephant Subbulakshmi | உயிரிழந்த குன்றக்குடி யானை! கதறி அழுத மக்கள்! சுப்புலட்சுமியின் இறுதி காட்சி

 உயிரிழந்த குன்றக்குடி யானை! கதறி அழுத மக்கள்! சுப்புலட்சுமியின் இறுதி காட்சி

தீ விபத்தில் உயிரிழந்த குன்றக்குடி யானை சுப்புலட்சுமியின் உடல் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கண்ணீருடன் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள குன்றக்குடி சண்முகநாதன் கோவிலில் பக்தர் ஒருவரால் சுப்புலட்சுமி யானை வழங்கப்பட்டது. யானை தங்க வைக்கப்பட்டிருந்த கூடாரத்தில் மின்கசிவு காரணமாக ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் யானை `சுப்புலட்சுமி'க்கு காயம் ஏற்பட்டது. 

தீக்காயம் காரணமாக சிகிச்சை பெற்றுவந்த யானை பரிதாபமாக உயிரிழந்தது. குன்றக்குடி மடத்தில் வைக்கப்பட்டிருந்த யானையின் உடலுக்கு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். குன்றக்குடி கிராமம் முழுவதும் வியாபாரிகள் கடைகளை அடைத்து யானைக்கு அஞ்சலி செலுத்தினர்.  

ஏராளமான கிராம மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து யானை சுப்புலட்சுமிக்கு கண்ணீருடன் மரியாதை செலுத்தினர். இறுதியில் யானை சுப்புலட்சுமியின் உடல் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட லாரியில் ஏற்றப்பட்டு மக்களின் கண்ணீருக்கு நடுவில் இறுதி ஊர்வலம் நடந்தது. காரைக்குடி மதுரை சாலையில் உள்ள இடத்தில் யானையின் உடல் கால்நடை மருத்துவ குழுவால் உடல் கூறு ஆய்வு செய்யப்பட்டு பின் நல்லடக்கம் செய்தனர்.

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola