கரூர் கூட்ட நெரிசல் அரசுப் பணி கொடுத்த விஜய்..ரத்து செய்த மதுரை நீதிமன்றம்

Continues below advertisement

கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் விஜய் நேரில் சென்று வழங்கிய அரசுப் பணிக்கான ஆணையை மதுரை உயர்நீதிமன்ற கிளை ரத்து செய்துள்ளது.

தவெக தலைவர் விஜய் கடந்த ஆண்டு செப்டம்பரில் கரூருக்கு பிரச்சாரத்திற்கு சென்றபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

இதில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு அப்போதைய திமுக அரசு சார்பில் தலா 10 லட்ச ரூபாயும், விஜய் தரப்பில் தலா 20 லட்ச ரூபாயும் நிவாரணத்தொகை வழங்கப்பட்டது. அதேவேளையில் இதுதொடர்பான வாழ்க்கை CBI விசாரித்தும் வருகிறது.

இவ்வாறிருக்க, சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்று முதலமைச்சரான விஜய், ஜூலை 10-ம் தேதி கரூருக்கு நேரில் சென்று, கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேரின் குடும்பத்தைச் சேர்ந்த 31 பேருக்கு கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான ஆணையை வழங்கினார்.

கூட்ட நெரிசல் வழக்கை CBI விசாரித்துக் கொண்டிருக்கும்போது எப்படி அரசுப் பணி வழங்கலாம், அரசு வேலை கனவோடு லட்சக்கணக்கானோர் TNPSC தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில் அவர்களின் கனவுகளைச் சிதைக்கும் வகையில் இவ்வாறு அரசுப் பணி வழங்கலாமா என்று பல்வேறு தரப்பிலிருந்தும் எதிர்ப்புகள் வந்தது.

மேலும், அரசுப் பணிக்கான ஆணையை ரத்து செய்யக்கோரி மதுரை உயர் நீதிமன்ற கிளையில் பொதுநல வழக்குகளும் தொடரப்பட்டன.

இந்த நிலையில் மதுரை நீதிமன்றத்தில் இவ்வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "கருணை அடிப்படையில் வழங்கப்படும் அரசுப் பணியை பொறுத்தவரை சில வழிகாட்டுதல்கள் உள்ளன. வயது, கல்வி என தகுதியின் அடிப்படையிலேயே அவை வழங்க வேண்டும். அவ்வாறு தான் இதில் அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. இதை எப்படி எதிர்க்கிறார்கள் எனத் தெரியவில்லை" என்று வாதிட்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "அரசுப்பேருந்து விபத்துக்களில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, அரசு வேலை வழங்கினால் எப்படி என்ற கேள்வி இங்கு எழுகிறது. சிவகாசியில் அடிக்கடி வெடி விபத்து நிகழும் சூழலில், அவர்களுக்கு அரசுப்பணி கோரினால் என்ன செய்வது?

வேலைவாய்ப்பிற்காக பலரும் காத்திருக்கிறார்கள். திறன் வளர் பயிற்சிகளை வழங்கி பாதிக்கப்பட்ட நபரின் குடும்பத்திற்கு உதவலாமே? அது இவ்வாறு பணி வழங்குவதை விட பயனுள்ளதாக இருக்கும்.

அரசுத்தரப்பில் சாதாரண பணி வழங்குவதாக் கூறுவதை ஏற்க இயலாது. எப்பணியும் சாதாரண பணி அல்ல. அது ஒருவரின் குடும்பத்திற்கு உதவும் பணியே" குறிப்பிட்டு, கரூர் கூட்டநெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுப்பணி வழங்கிய அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டனர்.

முதலமைச்சர் விஜய் அரசுப் பணி ஆணையை வழங்கிய மூன்றே வாரத்தில் மதுரை நீதிமன்றம் அதனை ரத்து செய்திருப்பது பேசுபொருளாகியிருக்கிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram
Continues below advertisement
Sponsored Links by Taboola