Karur Drunk Man : நடுரோட்டில் Bike! மதுப்பிரியர் அலப்பறை அலறிய வாகன ஓட்டிகள்

Continues below advertisement

கரூரில்  போதை தலைக்கேறிய நிலையில் மதுப்பிரியர் ஒருவர் சாலையில் தனது பைக்கி நிறுத்திவிட்டு  அலப்பறையில் ஈடுப்பட்ட வீடியோ சமூக வலை வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட காந்தி கிராம் பகுதியில் கரூர்- திருச்சி சாலையில், இந்த சாலையில் மாவு மில் பேருந்து நிறுத்தம் அருகே அரசு மதுபான கடை செயல்ப்பட்டு வருகிறது. 

அந்த மதுபான கடையில் குடித்துவிட்டு வரும் மதுப்பிரியர்கள் சாலையின் குறுக்கே வாகனங்களில் தள்ளாடி கொண்டு செல்வதும், நடந்து செல்வதும் வழக்கமாக உள்ளது. 

இந்த நிலையில் இன்று அந்த அரசு மதுபான கடையில் மது அருந்தி விட்டு வெளியே வந்த சுமார் 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர், தலைக்கேறிய போதையில் தனது இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு போதையில் அங்கும், இங்கும் தள்ளாடியபடி நடந்து கொண்டிருந்தார். 

இதனால் சுமார் 15 நிமிடம் போக்குவரத்துக்கு இடையூறாக தனது இருசக்கர வாகனத்தை சாலையின் குறுக்கே நிறுத்திவிட்டு, போதையில் அவர் செய்த அலப்பறைகளை கண்ட பொதுமக்கள் முனுமுனுத்தப்படி  அவரை கடந்து சென்றனர். 

மேலும், அரசு மற்றும் தனியார் பேருந்துகள், கனரக வாகனங்கள் என  அனைத்து வாகனங்களும் போதையில் அவர் செய்த இடையூறு காரணமாக தங்கள் வாகனங்களை ஓரங்கட்டி இயக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டதால்  அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்ப்பட்டது.

இந்த நிலையில் இந்த  வீடியோ காட்சிகள்  தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram