
Jyotika on Hindi | ”என் மகனுக்கு இந்தியே பிடிக்காது” அடித்துக்கொள்ளும் DMK, BJP ஜோதிகா கொடுத்த பேட்டி
மும்மொழிக் கொள்கை போன்ற திட்டங்களால், மாநில அரசுகளிடம் உள்ள ஒரு சில அதிகாரத்தை மொத்தமாக பறிக்கும் விதமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளதால் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தநிலையில் நடிகை ஜோதிகா என் மகனுக்கு இந்தி சுத்தமா பிடிக்காது என்று நேர்காணல் ஒன்றில் பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.
தென்னிந்திய சினிமாவில் குறுகிய காலத்திலேயே முன்னணி நடிகையாக கனவு கன்னியாக வலம் வந்தவர் நடிகை ஜோதிகா. அவர் கொடுக்கும் சின்ன சின்ன எக்ஸ்பிரஷன்கள் தான் ரசிகர்களின் ஃபேவரட். ஆறே ஆண்டுகளில் தமிழ் சினிமாவை கலக்கிய ஜோதிகா நடிகர் சூர்யாவை திருமணம் பிறகு ஒரு பிரேக் எடுத்து கொண்டார். இவர்களுக்கு தியா மற்றும் தேவ் என ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பிறகு மீண்டும் '36 வயதினிலே' படம் மூலம் ரீ என்ட்ரி கொடுத்து கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களாக தேர்வு செய்து தற்போது நடித்து வருகிறார். வுமன் சென்ரிக் படங்களில் அதிகமாக கவனம் செலுத்தி வரும் ஜோதிகா ஒரே மாதிரியான கதைகளில் நடிக்காமல் பல வேரியேஷன் கொண்ட கதாபாத்திரங்களாக தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில், தற்போது டப்பா கார்ட்டெல் என்ற பாலிவுட் வெப் சீரிஸில் நடித்துள்ளார்.
இந்நிலையில், பேட்டி ஒன்றில் தன் மகனுக்கு இந்தி பிடிக்காது என்று ஜோதிகா பகிர்ந்த விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், எனது மகள் நன்றாக இந்தி பேசுவாள். ஆனால் எனது மகனுக்கு இந்தி சுத்தமாக பிடிக்காது. எந்த மொழியென்றாலும் அதனை கற்றுக்கொள்வது என்பது அவர்களது உரிமை. அதனை திணிக்கக்கூடாது என்று கூறியதாக ஒரு பழைய பேட்டி இணையத்தில் தற்போது பரவி வருகிறது.
பொது பட்டியலுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை, மாநில அரசு பட்டியலுக்கு கொண்டு வரவேண்டும் என, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. ஆனால், புதிய தேசிய கல்விக் கொள்கை, மும்மொழிக்கொள்கை போன்ற அடுத்தடுத்த திட்டங்களால், மாநில அரசுகளிடம் உள்ள ஒரு சில அதிகாரத்தையும் மொத்தமாக பறிக்கும் விதமாக மத்திய அரசின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன. இந்தநிலையில் மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கான ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்திட்ட நிதியை விடுவிக்க இயலாது என்று அறிவித்துவிட்டது. இந்த விவகாரத்தில் பாஜகவிற்கும், திமுகவிற்கும் சமூக வலைதளங்களில் கடுமையான மோதல் போக்கு நிலவி வருகிறது.
இந்தநிலையில் ஜோதிகா ஹிந்தி குறித்து பேசிய பேட்டி சமூகவலைதளத்தில் வைரலாகி வருவது கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் தான் சூர்யா ஜோதிகா தனது மும்பையில் தனது பிள்ளைகளின் படிப்பிற்காக குடியேறியதாக தகவல் வெளியான நிலையில் ஜோதிகா அதனை மறித்து எனது பெற்றோர்களுக்காக தான் மும்பையில் உள்ளோம் என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.