GV Prakash on Kallakurichi kalla sarayam : ”இழப்பீடுகள் எதையும் ஈடுசெய்யாது” ஜி.வி.பிரகாஷ் ஆதங்கம்
கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம், இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது என இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ்
நேற்று முன்திகடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.னம் கருணாபுரத்தில் விற்கப்பட்ட கள்ளச்சாரயத்தை அருந்திய பலருக்கு, கண் எரிச்சல், வயிற்றுவலி போன்ற உபாதைகள் ஏற்பட்டன. உடனடியாக அவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிலரின் நிலை மோசமடைந்ததால் புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சிலர் சேலம் அரசு மருத்துவமனைக்கும் அழைத்துச் செல்லப்பட்டனர்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் 13 பேர் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி உயிரிழதனர். தற்போது கள்ளச்சாராயத்தால் பலியானோர் எண்ணிக்கை 40-ஆக உயர்ந்துள்ளது. கள்ளச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தநிலையில் இதுதொடர்பாக இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், காண்போர் நெஞ்சம் கலங்கி பதறுகிறது . கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் தமிழக அரசின் தடுமாற்றத்தால் நிகழ்ந்த பேரவலம். நியாப்படுத்த முடியாத பெருங்குற்றம். இழப்பீடுகள் எதையும் ஈடுகட்டாது , இனி மரணங்கள் நிகழாவண்ணம் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை கிடைப்பதை உறுதி செய்யும் வரை. என்று ஜிவி பிரகாஷ் தெரிவித்துள்ளார்