Guindy doctor stabbed : அரசு மருத்துவருக்கு கத்திக்குத்து! HOSPITAL-ல் பகீர்! வட மாநிலத்தவர் கொடூரம்

Continues below advertisement

சென்னை கிண்டி அரசு மருத்துவமனைக்குள் நுழைந்து 4 பேர் கொண்ட கும்பல் பணியில் இருந்த மருத்துவரை கத்தியால் குத்திய பகீர் சம்பவம் நடந்துள்ளது.

கிண்டி கலைஞர் நூற்றாண்டு அரசு மருத்துவமனையில் புற்றுநோய் பிரிவில் பாலாஜி என்பவர் மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். மருத்துவர் பணியில் இருந்த போது திடீரென உள்ளே வந்த நபர்கள் கத்தியால் சரமாரியாக குத்தியதாக தெரிகிறது. இதில் படுகாயமடைந்த மருத்துவர் அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் கத்தியால் குத்தியது யார் என விசாரணையை தீவிரப்படுத்தினர். இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்ரமணியன், வட இந்தியர்கள் 4 பேர் மருத்துவரை அறைக்கும் பூட்டி கத்தியால் குத்தியுள்ளனர் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை கைது செய்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மற்ற நபர்களையும் கண்டுபிடித்து சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

புற்றுநோய் பிரிவில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட தனது தாய்க்கு சரியாக சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி மருத்துவர் மீது கத்திக்குத்து நடந்துள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மருத்துவமனையில் வைத்தே மருத்துவர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் மக்களுக்கு அச்சத்தை கொடுத்துள்ளது. மருத்துவமனை வளாகத்தில் போலீசார் குவிந்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram